பதிவு செய்த நாள்
14
செப்
2024
02:09
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; வாழ்வில் குறிக்கோள் எது என்பதை தெரிந்து கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் போராடி வெற்றி பெறும் மாதம். எந்தவொரு செயலிலும் இந்த மாதம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்ப்பு குருபகவானால் நிறைவேறக்கூடும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரண் அடைவர். வழக்கு விவகாரம் சாதகமாகும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் வரும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விரய செலவுகளும் ஒரு சிலருக்கு காத்துக் கொண்டிருக்கிறது. ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஏதேனும் சின்னச் சின்ன பிரச்னை, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக நிதானமாக செயல்படுவதும், பிறரை அனுசரித்துச் செல்வதும் இந்த மாதம் உங்களுக்கு நல்லது. சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். மேலைநாட்டு முயற்சிகள் இந்த மாதத்தில் லாபத்தை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 11
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 23, 27. அக். 5, 9, 14.
பரிகாரம்: திருவல்லிக்கேணி வேங்கடக்கிருஷ்ணரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
திருவாதிரை: நினைத்ததை சாதிக்கும் ஆற்றலும், புத்திசாலித்தனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் உங்கள் முயற்சிக்கு ஏற்ற மாதம். உங்கள் ஜென்ம ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை. அவசர வேலை எதுவாக இருந்தாலும் அதிலும் கவனம் வேண்டும். ஜீவன ஸ்தானத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். வெளிநாட்டு தொடர்பு நன்மையை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி, சங்கடம் விலக ஆரம்பிக்கும். சூரிய பகவான் சஞ்சரித்து வருவதால் வேலைபளு ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கேற்ற வருமானமும் இருக்கச்செய்யும். குரு பகவானின் பார்வையால் சங்கடம் இல்லாமல் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் அடைய முடியும். 19.9 முதல் 14.10 வரை சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம், லாபம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் 19.9 முதல் 5.10 வரை நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கல்வியாளர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். புதிய பொறுப்பு, பதவி என்ற நிலை ஒரு சில அரசியல்வாதிகளுக்கு ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை மறையும். புதிய சொத்து வாங்க முயற்சித்தவர்களின் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: அக். 11, 12.
அதிர்ஷ்ட நாள்: செப். 22, 23, 31. அக். 4, 5, 13, 14.
பரிகாரம்: வைகுண்ட நாதரை வழிபட நினைத்தது நிறைவேறும்.
புனர் பூசம் 1, 2, 3 ம் பாதம் : வாழ்க்கைப் பற்றிய ஞானமும், கல்வி அறிவும் கொண்டு பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை மூன்றும் உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். சுக ஸ்தானத்திற்கு அவருடைய பார்வை உண்டாவதால் நெருக்கடி விலகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வீடு கட்டுவதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்தபோதும் அது நிறைவேறாமல் போயிருந்த நிலையில் அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட விரோதம், போட்டி மறையும். வழக்கு சாதகமாகும். மறைந்திருந்த உங்களுடைய செல்வாக்கு, அந்தஸ்து, புகழ் எல்லாம் மீண்டும் வெளிப்படும். சமூகத்தில் மரியாதைக்குரிய நபராக வெளிவருவீர். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக்கொள்வீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். சாதுரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வரவு வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபம் வெளிப்படும். நிதானமாக செயல்பட்டு அதனால் நன்மைகள் காண வேண்டிய மாதம் இது. அரசியல்வாதிகளுக்கு இது யோகமான மாதம். திட்டமிட்டு செயல்படுவோருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: அக். 12
அதிர்ஷ்ட நாள்: செப். 21, 23, 30. அக். 3, 5, 14.
பரிகாரம்: குரு பகவானை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.