பதிவு செய்த நாள்
14
செப்
2024
02:09
மேஷம்; அசுவினி: எடுக்கும் முயற்சி எதுவாக இருப்பினும் அதில் வெற்றிகண்டு வரும் உங்களுக்கு, இந்த மாதம் நன்மையான மாதம். உங்கள் வேலை விறுவிறுவென நடந்தேறும். உடலில் இருந்த நோய் நொடிகள் விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். எதிரி உங்களிடம் பணிந்து செல்லும் நிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நீடித்துவந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எல்லா வகையிலும் உங்களுடைய செல்வாக்கு உயரும். உங்கள் ராசிநாதனால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அதனால் பலமடங்கு லாபமும் அடைவீர்கள். துணிச்சல், தைரியமாக செயல்பட வேண்டிய மாதம் இது. இறையருளும், குலதெய்வ அருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு வர எல்லா வகையிலும் நன்மை காண முடியும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தன காரகனால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் லாபம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு இந்த மாதம் அதற்குரிய வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலாளர்கள் நிலை முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி வெற்றி அடையும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதம். எதிர்பார்த்த வரவு இருக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததையெல்லாம் சாதித்திடக்கூடிய நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம்: அக். 6,7.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 25, 27. அக். 19, 16.
பரிகாரம்: விநாயகரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
பரணி: தைரியமாக, வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதம். சூரிய பகவான் உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். அரசு வழியில் நிறைவேறாமல் இருந்த வேலைகளை முடித்து வைப்பார். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தொழிலில் இருந்த போட்டி நீங்கும். எதிரி விலகும் அளவு உங்களுடைய செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி என்று தேடிவரும். நினைத்ததை சாதித்திடக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ராசியாதிபதியால் வருமானத்திற்கு எந்த வகையிலும் குறைவிருக்காது. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ப பணம் பெருகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அலுவலகப் பணியில் இருந்த பிரச்னை விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதற்கு இந்த மாதத்தில் வாய்ப்புகள் உள்ளன. குரு பகவானின் பார்வையால் பிரகாஷம் அடைவீர்கள். தொழிலில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வரவு அதிகரிக்கும் என்ற நிலையில், செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும். உழைப்பாளர், விவசாயி, கலைஞர்கள் நிலை முன்னேற்றம் அடையும். பெண்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: அக். 7, 8.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 24, 27. அக். 6, 9, 15.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும்.
கார்த்திகை 1 ம் பாதம்:
பிறரை வழிநடத்தும் திறன் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் செல்வாக்கான மாதம். உங்கள் ராசிநாதன் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும், நட்சத்திர நாதன் ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்க்காத அளவிற்கு நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும். உங்களுடைய ஆற்றல் இப்பொழுதுதான் உங்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும். மற்றவர்கள் உங்களைப் பெருமையுடன் பார்க்கின்ற நிலை உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் பெற்றவராக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். எந்த வேலையை எடுக்கின்றீர்களோ அந்த வேலையில் உங்களுக்கு லாபம் காத்திருக்கிறது. தோல்வி, எதிர்ப்புகளும் இல்லை என்றே சொல்லலாம். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பணியிடப் பிரச்னை முடிவிற்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் திருந்துவார்கள். புதிய பாதையில் உங்கள் பயணம் செல்லும். தொழில், வியாபாரம், அரசியல் என நீங்கள் ஈடுபடும் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் நிலை இந்த மாதம் யோகமாக இருக்கும். விருப்பம் நிறைவேறும். விவசாயிகளின் வாழ்க்கை வளமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு லாபத்தை உண்டாக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். இந்த மாதம் அனைவருக்குமே யோக மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: அக். 8.
அதிர்ஷ்ட நாள்: செப். 18, 19, 27, 28. அக். 1, 9, 10.
பரிகாரம்: சூரியனை வழிபட வாழ்வில் வளம் கூடும்.