பதிவு செய்த நாள்
13
டிச
2024
01:12
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம் .. நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் முன்னேற்றமான மாதம். சனி பகவான் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவார். இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றமடையும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். எதிர்ப்பு இல்லாத நிலை இப்போது உருவாகும். இழுபறியாக இருந்த வழக்குகள், பிரச்னை எல்லாவற்றிலும் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் ஜனவரி 1 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த ஒப்பந்தங்கள் இப்போது கைக்கு வரும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் வேகம் கூடும். வெளி நாட்டு தொடர்பு லாபம் தரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன. 1.
அதிர்ஷ்ட நாள்: டிச. 18, 23, 27. ஜன. 5, 9.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
திருவாதிரை: எதிலும் துணிச்சலாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் நன்மையான மாதம். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் தொழில், வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிப்பார். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த வரவு வரும். சுக்ரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பாக்யாதிபதி சனிபகவான் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனம் தெளிவடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவேண்டிய பணம், சொத்து கைக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பெரிய மனிதர்கள் சந்திப்பு உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகூலமும் உண்டாகும். நீங்கள் எடுக்கின்ற முயற்சி இப்போது லாபமாகும். உழைப்பு அதிகரித்து அதன் காரணமாக சோர்வு ஏற்படும் என்றாலும் வருமானத்தின் காரணமாக அவை உங்களுக்குத் தெரியாமல் போகும். நீங்கள் நினைத்திருந்த வேலை ஒவ்வொன்றாக நடந்தேறும். பணியில் இருப்பவர்களுக்கு இது யோகமான மாதம். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: ஜன. 2 .
அதிர்ஷ்ட நாள்: டிச. 22, 23, 31. ஜன. 4, 5, 13.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடம் நீங்கும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மார்கழி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குருபகவான் வக்ரம் அடைந்திருப்பதால் செலவுகள் மட்டுப்படும். இருந்தாலும், அனைத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஜன. 1 வரை உங்கள் ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சாதகமாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். இதுவரையில் இருந்த நெருக்கடி நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் யோகமான பலன்களை வழங்குவார். அவருடைய மூன்று பார்வைகளும் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை பலவித முயற்சிகள் மேற்கொண்டும் நிறைவேறாமல் இருந்த வேலை இப்போது நடந்தேறும். வாழ்க்கைக்குரிய அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியும், தொடங்க நினைத்தவர்களின் முயற்சியும் வெற்றியாகும். செய்துவரும் தொழில் விருத்தியாகும். வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். சிறிய வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் கனவு நனவாகும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரைகள் படிப்பில் ஆர்வத்தை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்: ஜன. 3.
அதிர்ஷ்ட நாள்: டிச. 21, 23, 30. ஜன. 5, 12.
பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி வழிபட நன்மை உண்டாகும்.