பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
தனுசு: மூலம்.. தெய்வீக சிந்தனையுடன் பிறருக்கு வழிகாட்டும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிநாதன் மே 11 வரை 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால், தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். பணியாளர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சுபச் செலவு ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். ஏப்.26 வரை கேது ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சிறப்படையும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சுக்கிரன் மாதம் முழுவதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். மாணவர்களுக்கு படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எட்டாமிடத்தில் செவ்வாய் மறைவதால் விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டும். இடம் வீடு வாங்குவது, விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மூல பத்திரத்தை பார்த்து அதன் பிறகு முடிவிற்கு வரவும். அவசர வேலைகளை முடிந்த வரை இந்த மாதத்தில் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: மே3,4
அதிர்ஷ்ட நாள்: ஏப். 16, 21, 25, 30. மே 7, 12.
பரிகாரம்: செல்வ கணபதியை வழிபட செல்வாக்கு உயரும்.
பூராடம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதம். கடந்த ஒன்றரை வருடமாக சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களை உண்டாக்கிய ராகு பகவான், ஏப்.26 முதல் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். தடைபட்ட முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கடந்த கால நெருக்கடி விலகும். உங்களைப் பற்றி குறை பேசியவர்களும் தேடி வந்து பாராட்டுவர். செல்வாக்கு உயரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 3ம் இடத்தில் சனி பகவானும் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உறுதியான செயல்பாடு உங்களிடம் இருக்கும். தொழில், வியாபாரம் லாபமடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வருவதுடன் குடும்பம் பற்றிய அக்கறை உண்டாகும். நான்காம் இடத்தில் உச்சமான சுக்கிரனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். ஏப்.30 வரை புதனும் சாதகமாக இருப்பதால் கல்வியாளர்கள் முன்னேற்றம் அடைவர். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டுக்கு கல்விக்காகச் செல்வர்.
சந்திராஷ்டமம்:மே 4, 5.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,21,24,30,மே3,6,12
பரிகாரம்: குரு பகவானை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்; லட்சிய நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு சித்திரை மாதம் யோகமான மாதம். சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் அடைந்துள்ள நிலையில், குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுடைய எதிர்கால வளர்ச்சி நோக்கில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். இதுவரை இருந்த பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் செயல்களை எல்லாம் லாபமாக்குவார். தொடர்ந்து ஏப்.26 முதல் ராகுவும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இருவரும் போட்டிப் போட்டு உங்கள் முயற்சிகளுக்கு பலன் அளிப்பர். தயங்கி தயங்கி செயல்பட்ட நிலையெல்லாம் இனி மாறும். எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பீர்கள். அதில் வெற்றியும் அடைவீர்கள். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி எல்லாம் விலக ஆரம்பிக்கும். தொழில் ஸ்தானம் மே 11 வரை பலமடைந்து இருப்பதால் பணியாளர்கள் எதிர்பார்த்த உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வர். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். ஆனாலும் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வாங்கும் இடம் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும் உடல்நிலையில் சின்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அவற்றில் இருந்து குணமடைவீர்கள். மாணவர்களின் நிலை உயரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 5.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.19,21,28,30, மே3,10,12
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.