பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்
எதிலும் தனித்து நின்று சாதனைப் படைத்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் லாபாதிபதி குரு பகவான் தன குடும்ப வாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். தடைபட்டு இருந்த முயற்சி நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஜென்ம ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் வேகமாக செயல்படுவீர். நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற வேகம் உங்களுக்குள் இருக்கும். அதனால் உடல் நிலையிலும் சில பாதிப்பு ஏற்படும். உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றியாகும். இந்த நேரத்தில் தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவுகளால் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஜீவன ஸ்தானத்தில் ராகு சனி சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் மீது அதிக அக்கறை தேவை. உத்யோகத்தில் சிலருக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும், நியாயமாக செயல்படுவதும் உங்களுக்கு நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான அக்கறையில் மாற்றம் உண்டாகும். நண்பர்களால் முன்னேற்றத்தில் தடை ஏற்படும் என்பதால் படிப்பில் கவனமாக இருப்பது இக்காலத்தில் அவசியம். செவ்வாய் பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் நீச்சமாகி இருப்பதால் முன்னேற்றமான பலன்களை அவரால் வழங்க முடியாமல் போகும். ஜூன் 8 முதல் 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் உடல்நிலையில் சங்கடங்களை அதிகரிப்பார். உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் பேச்சுகளால் சிலருக்கு சங்கடம் உண்டாகலாம். நெருக்கடி ஏற்படலாம். சிலருக்கு பதவியும் பறிபோகலாம். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மே 15, 16. ஜூன் 11, 12.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, 10.
பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.
ரோகிணி
தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு, வைகாசி மாதம் மிக யோகமான மாதம். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் செயல்பாடுகளை முறியடிப்பீர். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். பத்தாம் இட சனி பகவானுக்கும் ராகு பகவானுக்கும் குருவின் பார்வைக் கிடைப்பதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் சிந்தனைகளும், தவறான பழக்க வழக்கங்களும் இந்த நேரத்தில் உங்களை முன்னேற்றப் பாதையில் இருந்து மாற்றம் செய்யும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை வேகமாக செயல்பட வைப்பார். அதனால், உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மே 16, 17. ஜூன் 12, 13.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29. ஜூன். 2, 6, 11.
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்
தைரியமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஜூன் 8 வரை சஞ்சரித்தாலும், அவர் நீச்சம் அடைந்திருப்பதால் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். அதன் பிறகு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் இணைவதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்பு தோன்றும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களைப் பாதுகாப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்துவார். நிதி நிலையை உயர்த்துவார். உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்ப்பு, வழக்கு என்றிருந்த நிலைகளை மாற்றுவார். இத்தனை நாட்களும் எதையோ பறிகொடுத்ததுபோல் இருந்த உங்களுக்கு இனி முன்னேற்றமான நிலை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களும் நண்பர்களும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவர். எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு இக்காலம் யோகமாக இருக்கும். தொழிலை விரிவு செய்வீர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிந்தனை தெளிவுபடும். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். வேளாண்மையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: மே 17. ஜூன் 13, 14.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன். 6, 9.
பரிகாரம்: வைத்தீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.