வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என உணர்ந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, ஆவணி மாதம் மிக யோகமான மாதமாக இருக்கும். ராசிநாதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்தாலும் அவருடைய பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு கிடைப்பதால் இதுவரை மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு மீண்டும் வெளிப்பட ஆரம்பிக்கும். எதைத் தொட்டாலும் தோல்வி நெருக்கடி என்றிருந்த நிலை மாறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். விரய செலவால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதியில்லை, உறக்கமில்லை என்றிருந்த நிலை மாறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஆக.26 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரி, கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வயதானவர்கள் சந்தித்த நெருக்கடி நீங்கும்.
தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். விரயாதிபதி சனி வக்கிரமாகியுள்ள நிலையில் அங்கு ராகு சஞ்சரித்தாலும் ராசிநாதனின் பார்வை விரய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தேவையற்ற செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். மாதம் முழுவதும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். மருத்துவச்செலவு குறையும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் விலகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரணடையும் நிலை ஏற்படும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலை மாறும். எல்லா வகையிலும் உங்கள் நிலை உயரும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு கூடும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களுக்கிருந்த நெருக்கடி விலகி எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களின் மாங்கல்யத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் விலகும்.
எந்த ஒன்றிலும் கவனமாக செயல்பட்டு வெற்றியடையும் உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். ஆக.26 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அலுவலர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். உறவுகளுடன் ஏற்பட்ட சச்சரவு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறவினரின் ஆதரவு கிடைக்கும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் ஏற்படும். ராசிநாதன் குருவின் பார்வை அஷ்டம ஸ்தானத்திற்கு கிடைப்பதால் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். ஜீவன ஸ்தானம் பலமடைவதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த நெருக்கடிகள் விலகும். விரய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். அரசியல்வாதிகள் செல்வாக்கு காண்பர். சிலருக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்:ஆக.29
அதிர்ஷ்ட நாள்:ஆக.21,23,30,செப்.3,5,12,14
பரிகாரம் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டால் முயற்சிகள் வெற்றி பெறும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »