உத்திரம் 2, 3, 4 ம் பாதம்; ஓய்வின்றி உழைத்து முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து மனதில் குழப்பம், செயல்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் செயல்களை எல்லாம் லாபம் ஆக்குவார். தடைகளை எல்லாம் நீக்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். முடங்கிய தொழில் மீண்டும் இயங்கும் அளவிற்கு நிலைகளை உருவாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக். 27 முதல் முயற்சி ஸ்தானத்தில் குருப்பார்வையில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களுக்குள் வேகத்தையும், எடுத்த வேலையை செய்து முடிக்கும் சக்தியையும் உண்டாக்குவார். அதன் வழியே லாபம் அதிகரிக்கும். கையில் பணப்புழக்கம் ஏற்படும். சிலருக்கு சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வைப்பார். இதுவரை வெறும் கனவாகவே இருந்தவை எல்லாம் இந்த மாதத்தில் நனவாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இருந்த பிரச்னைகள் மறையும். முதலீட்டிற்கேற்ப லாபம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 4.
அதிர்ஷ்ட நாள்: அக். 19, 23, 28. நவ. 1, 5, 10, 14.
பரிகாரம் நெல்லையப்பரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.
அஸ்தம்; திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகன் ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்திற்கு முடிவு ஏற்படும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல் பாதிப்பு விலகும். பிறரால் செய்து முடிக்க முடியாத வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்கள். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிப்பார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன் பொருள் சேரும். உறவினர் மத்தியில் தலைநிமிர்ந்து நடைபோட வைப்பார். குரு நீண்டநாள் கனவுகளை நனவாக்குவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு காதல் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு மணமேடை ஏறக்கூடிய பாக்கியம் உண்டாகும். மூன்றாம் அதிபதி செவ்வாய் அக். 27 முதல் சாதகமாக இருப்பதால் இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உருவாகும். வேலை தேடும் முயற்சியில் எதிர்பார்த்த தகவல் வரும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 5.
அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29. நவ. 2, 11, 14.
பரிகாரம் சந்திர பகவானை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்; தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை, சாதுரியம் என்ற அனைத்து அம்சமும் கொண்ட உங்களுக்கு, ஐப்பசி முன்னேற்றமான மாதம். அக். 27 முதல் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவார். வேகமாக செயல்பட வைப்பார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்கி வைப்பார். வருமானம் பல வழிகளிலும் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 3, 5, 7 ம் இடங்களைப் பார்ப்பதால் அக். 27 முதல் குரு மங்கள யோகம் ஏற்படுவதால் அந்தஸ்து உயரும். வேலைகள் தடையின்றி நடந்தேறும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். காவல்துறையினருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும். தனாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். விரய ஸ்தான கேது மறுபக்கம் செலவுகளை ஏற்படுத்துவார் என்றாலும், 6 ம் இட ராகு நோய்களில் இருந்து பாதுகாப்பார். எதிரி பயம் விலகும். செலவுகளும் அவசிய செலவாக, பூமி வாகனம் நகை என வாங்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் நிம்மதி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 6.
அதிர்ஷ்ட நாள்: அக்.18, 23, 27, நவ. 5, 9, 14.
பரிகாரம் பராசக்தியை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் விலகும்.
மேலும்
ஐப்பசி ராசி பலன் (18.10.2025 முதல் 16.11.2025 வரை) »