பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
12:04
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா ஏப்.,14ல் துவங்கி 25 வரை நடக்கிறது. ஏப்.,14ல் காலை 10.46 மணிக்கு மேல் காலை 11.10 மணிக்குள் கொடியேற்றமும், ஏப்.,21 இரவு 7.35 மணிக்குமேல் இரவு 7.59 மணிக்குள் அம்மனுக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏப்.,22ல் அம்மனின் திக்குவிஜயமும், ஏப்.,23ல் காலை 8.17 மணிக்கு மேல் காலை 8.41 மணிக்குள், திருக்கல்யாணமும், ஏப்.,24ல் காலை 6 மணிக்கு மாசிவீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது.
13.4.2013 வாஸ்து பூஜை.
14.4.2013 காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளல். காலை 10.45 - 11.10 மணிக்குள் கொடியேற்றம். கோயிலுக்குள் குலாலர் மண்டகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளல்.
15.4.2013 காலை 7 மணிக்கு சுவாமி அம்மன் தங்கசப்பரத்தில் 4 மாசி வீதியில் எழுந்தருளல். கோயிலுக்குள் முத்துராமய்யர் மண்டகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளல்.
16.4.2013 காலை 7 மணிக்கு சுவாமி அம்மன் தங்கசப்பரத்தில் 4 மாசி வீதியில் எழுந்தருளல். கோயிலுக்குள் கல்யாணசுந்தர முதலியார் மண்டகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளல்.
17.4.2013 காலை 9 மணிக்கு சுவாமி அம்மன் தங்க பல்லக்கில் வில்லாபுரம் ரோட்டில் எழுந்தருளல். கோயிலுக்குள் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் தங்குதல். இரவு 6 மணிக்கு தெற்குவாசலில் சுவாமி, அம்மன் இருவரும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல்.
18.4.2013 காலை 9 மணிக்கு சுவாமி அம்மன் தங்கசப்பரத்தில் 4 மாசி வீதியில் எழுந்தருளல். கோயிலுக்குள் ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி, அம்மன் இருவரும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல். இரவு 7.30 மணிக்கு கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் வேடர்பறிலீலை.
19.4.2013 காலை 7.30 மணிக்குசுவாமி அம்மன் தங்கசப்பரத்தில் 4 மாசி வீதியில் எழுந்தருளல். கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளல். மாலை 6 மணிக்கு கோயிலுக்குள் யானை மகாலுக்கு முன்பு எழுந்தருளி,சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை சொல்லப்பட்டு பின் வீதிக்கு எழுந்தருளல்.
20.4.2013 காலை 8 மணிக்கு கங்காளநாதர் 4 மாசி வீதி எழுந்தருளல். மதியம் 12மணிக்கு சுவாமி அம்மன் சிம்மாசனத்தில் கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படியில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளல். இரவு சுவாமி அம்மன் அஷ்டசக்தி மண்டபத்தில் திரு.எம். ராசு பண்டாரம் குமாரர்கள் புஷ்பச் சிங்கார திருக்கண்ணில் இரட்டை சோடசோபசார தீபாராதனை ஆனபின் கோயிலுக்குள் எழுந்தருளல்.
21.4.2013 காலை 10 மணிக்கு சுவாமி அம்மன் தங்கப்பல்லக்கில் கிழக்கு சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி எழுந்தருளல். கோயிலுக்குள் ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி மதியம் 3 மணிக்கு புறப்பாடு. இரவு 9 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி, அம்மன் இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளல். இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்.
22.4.2013 காலை 8 மணிக்கு சுவாமி அம்மன் மர வர்ண சப்பரத்தில் 4 மாசி வீதியில் எழுந்தருளல். கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியில் தங்குதல். இரவு 6 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி, அம்மன் இருவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளல். மாலை வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்.
23.4.2013 அதிகாலை 4 மணிக்கு சுவாமி அம்மன் சித்திரை வீதியில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளல். காலை 8.17 - 8.41 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம். கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் ஆனந்தராயர் புஷ்பப்பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளல்.
24.4.2013 காலை 6மணிக்கு சுவாமி அம்மன் 4 மாசி வீதியில் திருத்தேர். கோயிலுக்குள் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டபகப்படியில் தங்குதல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி, அம்மன் இருவரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளல்.
25.4.2013 சுவாமி அம்மன் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபம், ஆடிட்டர் லட்சுமண் சிவராமன் மண்டகப்படியில் எழுந்தருளல். இரவு 7 மணிக்கு 4 மாசி வீதியில் சுவாமி, அம்மன் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல். மதியம் தேவேந்திர பூஜை.