பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
எந்த நிலையிலும் மனம் தளராத மகர ராசி அன்பர்களே!
சூரியன்,புதன் ஆகியோர் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும், செவ்வாய் ஜூலை4க்கு பிறகு நன்மை தருவார். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.எனவே எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பெண்கள் அனுகூலமாக இருப்பார்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். அத்தியாவசியத் தேவைகளைப் பெற எந்த தடையும் இல்லை. மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமையால் மகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் ஜூலை4 வரை செவ்வாய் சாதமாக இல்லாததால், பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. ஜூலை 4க்குபிறகு புது வீடு மனை மற்றும் வாகனம் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். சிலர் நல்ல பதவி கிடைக்க பெறுவர். வியாபாரத்தில் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். ஜூலை 7,8ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஜூன்21,22, 27,28,29 தேதிகளில் சந்திரனால் சிறுசிறுதடைகள் வரலாம்.கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள் ஜூன்24க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகளைச் சந்திக்கலாம். மாணவர்களுக்கு காலம் பொன் போன்றது. இந்த காலத்தை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில்தான் உள்ளது.விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் விரைவில் வரும். பெண்கள் விருந்து விழா என சென்று வருவார்கள். ஜூன்30, ஜூலை1ல் நல்ல பலனைக் காணலாம். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட எண்கள்: 7,9. நிறம்: செந்தூரம், பச்சை.
நல்ல நாட்கள்: ஜூன் 19,20,21,22, 25,26, 30, ஜூலை1, 7,8,9,10,11,16.
கவன நாட்கள்: ஜூன் 15,16, ஜூலை12, 13.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து ஆசி பெறுங்கள்.