பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
குறையொன்றுமில்லாத கும்ப ராசி அன்பர்களே!
இம்மாதம் கேது 3-ம் இடத்தில் இருந்தும், குரு 4-ம் இடத்தில் இருந்தும் நன்மைகளை அள்ளித்தருவார்கள். ஜூன்24ல் சுக்கிரன் 5-ல் இருந்து 6-க்கு சென்று நற்பலனைக் கொடுப்பார். புதன் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவர் ஜூலை10 வரை வக்கிரம் அடைவதால், அவரால் கெடுபலன்கள் அதிகம் நடக்காது. மேலும் குருபகவானின் 5,7-ம் இடத்துப் பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளது. அவரின் பார்வையால் கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.பொருளாதார வளம் மேம்படும். எண்ணிய செயல்கள் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜூன் 25,26, 30, ஜூலை1 தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். ஜூலை 8,9,10 தேதிகளில் அதிக பணவரவு இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூன்24க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை உறுதுணை யாக இருக்கும்.விவசாயிகளுக்கு பழம், கிழங்கு வகை மற்றும் மானாவாரி பயிர்களால் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் முன்னிலைபடுத்தப்படுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உடல்நலம் மாத முற்பகுதியில் நன்றாக இருக்கும். ஜூலை4க்கு பிறகு லேசாக பாதிக்கப்படலாம்.பிள்ளைகள்நலனிலும் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட எண்: 2,6 நிறம்: மஞ்சள், வெள்ளை.
நல்ல நாட்கள்: ஜூன்15,16, 21,22,23,24, 27,28,29, ஜூலை2, 3, 9,10,11,12,13.
கவன நாட்கள்: ஜூன் 17,18, ஜூலை 14,15.
வழிபாடு: வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். ஜூன்24க்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். காகத்திற்கு அன்னமிட்ட பின் உண்ணுங்கள்.