ஆகமங்களில் ஆலய அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் ஆலய மூர்த்திகளைத் தொடக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. பலர் நந்தி பகவானின் காதுகளில் தங்களின் பிரார்த்தனைகளைக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். எனினும், அவ்வாறு செய்யும்போது தவறுதலாக நாம் நந்தியெம்பெருமானைத் தீண்டுவதாக அமைய நேரியடலாம். அது மட்டுமல்லாமல் நமது காற்று அவரின்மேல் பட்டாலோ, துர்நாற்றம் அவரின்மேல் பட்டாலோ அதனால் நமக்கு தோஷம் ஏற்படும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க நாம் நந்தியெம்பெருமானின் இடதுபுறம் வடக்கு நோக்கி நின்றுகொண்டு கைகூப்பி மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் நமது கோரிக்கைகளை மனதினால் தெரிவிக்கலாம். கண்டிப்பாக அவை, பரம்பொருளான சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.