திருச்சி தாயுமானவர் மீது ஞானசம்பந்தர் பாடிய ‘நன்றுடையானை எனத் தொடங்கும்தேவாரப் பதிகத்தை தினமும் மாலையில் விளக்கேற்றி படித்து வருவது விரைவில் நற்பலன் அளிக்கும். புதுமனை கட்டி பால்காய்ச்சிய பின் திருச்சி தாயுமான சுவாமியைத் தரிசிப்பதாகவும் நேர்ந்து கொள்ளலாம். அதிலுள்ள முதல் பாடலை மட்டும் தினமும் 12 முறை பாடினால் கூடபோதுமானது. “நன்று உடையானை தீயதில்லானை நரை வெள்ளேறுஒன்று உடையானை உமையொரு பாகம் உடையானைசென்று அடையாத திருவுடையானை சிராப்பள்ளிக் குன்று உடையானை கூற என் உள்ளம் குளிருமே.