விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் புராணகாலம் முதலே இருக்கிறது. மகோற்கடர் என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காஸ் யப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்டபோது, ஒரு அசுரன் அவர்களை தடுத்தான். விநாயகர் ய õகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேல் இருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனை பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால், அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. விநாயகரே அதற்கு முன்னோடியாக இருந் துள்ளார். தனக்கு வந்த தடையை தேங்காய்களை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் காரணமாகவே சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது. இந்த தேங்காயை குழந்தைகளுக்கு கொடுத்தால் பிள்ளைக் கடவுளான விநாயகரின் மனம் குளிரும் என்பது ஐதீகம். மட்டைக்குள் இரு க்கும் தேங்காயில்தான் அமிர்தம் போன்ற சுவையுடைய தண்ணீர் இருக்கிறது. சாதாரண விஷயங்களை ஆராய்ந்தால் கூட, பலன் மிக்க தகவல்கள் கிடைக்கும் என்பதையும் சிதறு தேங்காய் தத்துவம் உணர்த்துகிறது.