பதிவு செய்த நாள்
15
செப்
2015
11:09
வருடத்திற்கு 450 விழாக்கள் நடக்கும் ஒரே தலம் திருப்பதி ஏழுமலையான் கோவில். இதில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியம். இந்த ஆண்டு இங்கு இரண்டு பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. பிரம்மனே நடத்தும் விழா என்பதால், இது பிரம்மோற்ஸவம் ஆயிற்று. விழாவின் ஐந் தாம் நாள் (செப்20, அக்.18) கருவறையில் உள்ள சீனிவாசப் பெருமாளே கருட வாகனத்தில் உலா வருவார் என்பதால் அன்று பெரும் கூட்டம் இ ருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு இரட்டை பிரம்மோற்ஸவம் நடக்கும்.விழா நடக்கும் ஒன்பது நாட்களும் தினமும் காலையிலும் இரவிலும் உற்சவரான மலையப்பசுவாமி விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருடாந்திர பிரம்÷ மாற்ஸவம் நாளை (செப்.16) துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. நவராத்திரி பிரம்மோற்ஸவம் அக். 14ல் துவங்கி 22ம்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் பெரிய, சின்ன சேஷ வாகனம், சிம்மம், முத்து பந்தல், கற்பக விருட்சம், சர்வபூபாளம், கருடன், அனுமன், யானை, சூர்ய, சந்திரபி ரபை, குதிரை வாகனங்களில் சுவாமி பவனி வருவார். செப்.23, அக்.21 ஆகிய நாட்களில் காலையில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசி நாட்களான செப்.24 மற்றும் அக்.22 காலையில் சக்கர ஸ்நானம் நடக்கும். பெருமாளின் பேரருளைப் பெற கிளம்பலாமா! -எல்.முருகராஜ்