நம் தெய்வங்கள் அகிம்சா மூர்த்திகள். ஆயிரம் நாமம் கூறி அர்ச்சித்தால் எந்தத் தெய்வத்திற்கும் வீரம் உண்டாகிவிடும்; அதற்குப் பலமான நிவேதனம் படைக்க வேண்டும் என்பது வழக்கம். இரத்தத்திற்குப் பதில், பசுமாட்டின் இரத்தம் எனப்படும் சாத்வீகமான பாலில் பாயசம் செய்து படைப்பார்கள். உடம்பின் சதை, உளுந்துச் சத்தினால் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். அதையே வடையாகச் செய்து படைப்பார்கள். ஆஞ்சனேயர் வடையை மாலையாக அணிந்து அவ்வப்போது உண்டு மகிழ வேண்டும் என்று நினைத்து, நம்மவர் வடையை மாலையாகச் சாத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர்.
அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. எப்படியிருப்பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு.