வீட்டில் இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக, விளக்கேற்றுவதில் இரண்டு வகை உண்டு. சிலர் விளக்கேற்றி, அரை மணி நேரம் எரியவிட்டு, பிறகு அணைத்துவிட்டு வெளியில் சென்று விடுவார்கள். ஆனால், விளக்கில் எண்ணெய் நிறைய விட்டு, மிகச் சிறியதாக திரியைத் தூண்டி விட்டு, நாள் முழுவதும் எரிய விடுவது மிகவும் விசேஷம். சுவாமி சன்னிதி எப்போதும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதால். இரவு நேரத்தில் பாலை வைத்து, புஷ்பம் கொண்டு அமர்த்தி விட்டுத்தான் செல்லவேண்டும். எண்ணெய் தீர்ந்து, திரியும் எரிந்து அதுவாக அணைவதுபோல் விடக்கூடாது.