பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
10:04
பஞ்சாங்கங்கள் அனைத்தும் 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டை சித்திரை 1ஐ தொடக்கமாக கொண்டு கணிக்கப்பட்டுள்ளன. மன்மத ஆண்டு முடிந்து, துர்முகி ஆண்டு சித்திரை 1ல் (ஏப். 14) பிறக்கிறது. இந்த ஆண்டில் சனிபகவான் விருச்சிக ராசியிலும், ராகு சிம்ம ராசியிலும், கேது கும்பத்திலும் இருக்கிறார்கள். தற்போது வக்கிரம் அடைந்து சிம்ம ராசியில் இருக்கும் குரு பகவான், ஜூன் 20ல் வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்குள்ளேயே இருக்கிறார். ஆக.2ல் கன்னி ராசிக்கு மாறுகிறார். அதன்பிறகு 2017 ஜனவரி16-ந் தேதி அதிசாரமாக (முன்னோக்கி செல்லுதல்) துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்த பிறகு, 2017 மார்ச் 10ல் கன்னி ராசிக்கே திரும்பி விடுகிறார். சனிபகவான் ஜூலை 14 வரை வக்கிர கதியில் இருந்தாலும் விருச்சிக ராசிக்குள்ளேயே இருக்கிறார். இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. சிலருக்கு சுமாரான பலன் என குறிப்பிட்டு இருந்தாலும், அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம் என்பதுபோல் தான் பரிகாரம் இருக்க வேண்டும். எளிய பரிகாரம் செய்தாலே கெடுபலன் குறைந்து மனதில் மகிழ்ச்சி நிலவும். -
தமிழகத்தின் நிலை!
*புதிய அரசு நிதி நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கும். அதற்குரிய சாதக நிலையும் ஏற்படும்.
*வரிச்சுமை குறையும்
*ரியல் எஸ்டேட் வகையில் நிலங்கள் நல்ல விலை போகும்.
*திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் புராதன பொருட்கள் பூமியில் இருந்து கிடைக்கும்.
*அரசு சார்ந்த கடன்கள் மக்களுக்கு சுலபமாக கிடைக்கும். இதனால் புதிய தொழில்கள் வளரும்.
*மக்களின் சேமிப்பு சக்தி அதிகரிக்கும்.
*வெங்காயம், பூ விலை குறையும்,
*குழந்தைகளின் ஒழுக்கம் குறித்த விஷயத்தில் பெற்றவர்களுக்கு கவலை கூடும். குழந்தைகள் ஜாக்கிரதை!
குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய ஆண்டு இது. மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளும், விளையாடச் செல்லும் குழந்தைகளும் அதிகம் காணாமல் போகும். அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை சூரியனின் சஞ்சாரம் சரியாக இல்லை. இந்த கால கட்டத்தில் சூறாவளி காற்று அதிகமாக இருக்கும். பண்டித காழியூர் நாராயணன்