புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் கடலில் ஸ்நானம் செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2016 03:04
பொதுவாக, திருமணமாகி ஒரு வருடத்துக்கு கடலில் ஸ்நானம் செய்யக் கூடாது என்கிற சம்பிரதாயம் உண்டு. தனுஷ்கோடி, ராமசேதுவுக்கு மட்டும் அந்த விதி கட்டுப்பாடு கிடையாது. ராமசேது, தனுஷ்கோடியில் எப்போது வேண்டுமானாலும் ஸ்நானம் செய்யலாம். கடலில் எல்லா நாட்களிலும் கூட ஸ்நானம் செய்யக்கூடாது. பருவக் காலங்களில் மட்டுமே ஸ்நானம் செய்ய வேண்டும். அமாவாஸ்யை, பவுர்ணமி, முதலிய நாட்கள், கிரஹண நாட்களில்தான் கடலில் ஸ்நானம் செய்யவேண்டும். மற்ற நாட்களில் கடல் நீரைத் தொடுவதே தீட்டு என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்தக் கட்டுப்பாடு, ராமேஸ்வரத்துக்குக் கிடையாது.