வழிபடும் போது மனம், மொழி, உடலால் ஒன்றி வணங்க வேண்டும். வழிபாட்டின் போது, கடவுளைத் தவிர வேறு சிந்தனை மனதில் வரக்கூடாது. ஆனால், பிரச்னையே இங்கு தான்! மனம் எங்கோ இருக்க, உடம்பு மட்டும் சன்னதியில் நின்று கொண்டிருக்கும். பத்து விரல்களும் ஒன்று பட்டுக் கைகள் குவிவது போல், மனமும் இறைவனின் திருவடிகளில் குவிந்து நிற்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். திருவாசகத்தில், கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க என்று குறிப்பிடுவதைக் காணலாம்.