Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சகல ஐஸ்வர்யங்களும் தரும் குபேர ... பாம்பை வழிபடுவது ஏன்? பாம்பை வழிபடுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பூஜையில் பயன்படும் மணிக்கு பூஜை!
எழுத்தின் அளவு:
பூஜையில் பயன்படும் மணிக்கு பூஜை!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2016
02:04

மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று ..அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடிவிடும். துர்தேவதை, போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்ஒருவேளை வந்து விடலாம். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்! தினமும் மணி அடிப்பதால் அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். பூஜையின்போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.

இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன ! இந்த பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர் ! மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி ! அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன். நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் ! எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

காண்டா மணி பூஜைக்கான மந்திரம்:

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
காண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ் வானலாஞ்ச நம:

உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar