சாவ் நடனம் ஆடினால் முருகனுக்கு மிகவும் பிடிக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2016 03:05
மேற்கு வங்காளத்தில் புருலியா மாவட்டத்தில் வாழும் பூமிஜ் பழங்குடி மக்கள் மத்தியில் கார்த்திகேய (முருகன்) வழிபாடு சிறப்பு மிக்கதாக உள்ளது. முருகனை சூரியனின் அம்சமாகக் கருதும் இவர்கள், விவசாயம் செழிப்பதற்காக இவரை வழிபடுகின்றனர். தாரகாசுரனிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றிய வீர இளைஞர் கார்த்திகேயன் என்றும், கார்த்திகைப் பெண்கள் முருகனை வளர்த்து ஆளாக்கி பார்வதியிடம் ஒப்படைத்ததாகவும், அதனால் அவளுக்கு ஸ்கந்த மாதா’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். சிவனின் மகன் என்பதை விட, பார்வதியின் அம்சமான துர்க்கையின் பிள்ளையே முருகன் என்று இவர்கள் கருதுகின்றனர். பூமிஜ் மக்கள் துர்க்கை வழிபாட்டில் மாமிசம் படைத்தாலும், அவளது பிள்ளை கார்த்திகேயனுக்கு சைவ உணவு படைத்தே வணங்குவர். முருகனுக்கு தமிழகத்தில் இரண்டு மனைவியரைத் தந்துள்ளோம். ஆனால், அங்கு கார்த்திகேயனை பிரம்மச்சாரியாகக் கருதுகின்றனர். புருலியா சாவ் நடனம் என்னும் பெயரில் முகமூடி அணிந்து ஆடும் நடனம், கார்த்திகேய வழிபாட்டில் பிரசித்தமானது. கேரளத்தின் கதகளி போன்று இதில் அபிநயத்துடன் கலைஞர்கள் ஆடுவர்.