ருத்ராட்சத்தில் இயற்கையாகவே மின்காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி முழுவதும் நமக்குக் கிடைக்க ருத்ராட்சத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கான பராமரிப்பு ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை விபூதி, சந்தனம் வைத்து மறைக்கக் கூடாது. மாதம் ஒருமுறை ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது பசும்பாலில் 24 மணி நேரம் ஊற வைத்து, புதிய பிரஷ் கொண்டு தேய்த்து எடுத்து, தூய்மையான நீரில் கழுவி, துடைக்க வேண்டும். சோப்பைப் பயன்படுத்தக்கூடாது. ருத்ராட்சத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனில், சாணத்தில் தயாரித்த விபூதிக்குள் வைக்கலாம். ருத்ராட்ச மாலையை சுத்தப்படுத்தும்போது, பயபக்தியுடன் கீழ்க்காணும் மந்திரத்தை ஒன்பது முறை கூறவும்.
ருத்ராட்ச மாலையை பெற்றோரிடம் அல்லது தான் அதிகம் மதிப்பவரிடம் கொடுத்து, நமஸ்கரித்து வாங்கி அணிந்து கொள்ளவும். சிவன் கோயிலில் வைத்து அணிந்து கொள்வது சிறப்பு. அணிந்த பிறகு காரணமில்லாமல் கழட்டக் கூடாது.