பதிவு செய்த நாள்
04
ஜன
2017
04:01
ஞானநூல்கள் சிறப்பிக்கும் பஞ்ச பத்ரங்களில் ஒன்று துளசி. மற்றவை: அறுகம்புல், வேம்பு, வன்னி, வில்வம். இவற்றை அர்ப்பணித்து தீர்த்தம் விடும் பாத்திரத்துக்கு பஞ்சபத்ர பாத்திரம் எனப்பெயர். இதையே இன்னாளில் பஞ்சபாத்திரம் என்கிறோம். இவற்றில் துளசி பெருமாளுக்கு உரியது. இதன் நுனியில் பிரம்மன், அடியில் சங்கரன், மத்திய பாகத்தில் நாராயணன் வசிப்பதாகவும், மேலும் தேவர்கள் அனைவரும் அதில் உறைவதாகவும் ஐதீகம். அத்துடன், அதன் ஓரங்கள் கங்கைக்கு நிகரான புனிதம் பெற்றன. அதுபோன்றே, அறுகம்புல் பிள்ளையார் பெருமானுக்கு, வேம்பு அம்மனுக்கும், வன்னி திருமகளுக்கும், விநாயகருக்கும், வில்வம் சிவனாருக்கும் உகந்த இலைகளாகும்.