நீராடும்போது முதலில் பாதத்தில் நீர் ஊற்றி நனைத்து, மெள்ள மெள்ள மேல்நோக்கி நனைத்துக் கொண்டு வந்து, நிறைவாக தலையில் நீருற்றிக் குளிக்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். பார்த்தன், தனஞ்சயன் ஆகியன அர்ஜுனனின் வேறு பெயர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இவைபோக, இன்னும் பல பெயர்கள் உண்டு அவனுக்கு. பாண்டுவின் மகன் என்பதால் பாண்டவன், குரங்குக் கொடியை கொண்டவன் ஆதலால் கபித்வஜன், தூக்கத்தை வென்றவன் என்ற பொருளில் குடாகேசன், பாவமற்றவன் என்பதால் அனகன், குந்தியின் மகன் என்பதால் கௌந்தேயன், குரு வம்சத்தில் பிறந்தவன் ஆகையால் குருநந்தனன், ஒரே நேரத்தில் இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை கொண்டவன் என்பதால் சவ்யசாசி ஆகிய பெயர்களும் அர்ஜூனனுக்கு உண்டு.