ஏதோ ஒரு காலத்தில் நம் வீட்டுக்கு வந்த மருமகள்களையும், மாமியார், மாமனார்களையும் கொடுமை செய்திருப்பார்கள். பெற்றவர்களைக் கவனிக்காமல் விட்டிருப்பார்கள். காதலித்து கர்ப்பமாக்கி கை விட்டிருப்பார்கள். இவர்களது வம்சாவளியைத் துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அந்த முன்னோர் விட்ட சாபம் தான். இவ்வாறு துன்பப்படுபவர்கள் மாசி மகத்தன்று கும்ப கோணம் மகாமககுளத்தில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் முன்னோர் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.