நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் கடவுளுடன் சம்பந்தமுள்ள ஐந்து என பொருள். “பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. பரப்பிரம்மமான தெய்வமே ஐம்பெரும் பூதங்கள்” என்று பிரஸ்ன உபநிஷதம் கூறுகிறது. இயற்கையே இறைவன் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூத தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய தலங்கள்.