பாவை நோன்பு இருந்து நல்ல கணவனை வாழ்க்கைத்துணையாக அருளுமாறு பெண்கள் வேண்டுவதாக, மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார். அதில் அப்பெண்கள் தாங்கள் விரும்பும் மணமகனை அடையாளம் காட்டும் அற்புத வரிகளை சிந்திப்போமே! உன் அடியார் தாள் பணிவோம். ஆங்கவர்க்கே பாங்காவோம். அன்னவரே என் கணவராவார் இங்கு அடியார் என்று குறிப்பிட்டு, அவர்கள் விரும்பியிருப்பது விபூதி, ருத்ராட்சம் அணிந்த சிவத்தொண்டர்களைத் தான். பெண்களே விரும்பும் ஒன்றினால் திருமணம் எப்படித் தள்ளிப் போகும்?