தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் திருவிசநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு சவுந்தரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சிவயோகி நாதர் திருக்கோயில். இது, ரிஷப ராசிக்காரர்களுக்குரிய பரிகாரத் தலம். இக்கோயில் ஈசான்ய மூலையில் நான்கு யுகங்களில் பல்வேறு சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நான்கு பைரவர்கள், ஞான பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் எனும் திருப்பெயர்களில் அருள்பாலிக்கின்றனர். கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி அன்றும் மாலை 4.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், எல்லா அஷ்டமி நாட்களிலும் மாலை 6 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சதுர் கால பைரவர்கள் என அழைக்கப்படும் இவர்களை வழிபட, பொருளாதார சிக்கல்கள் விலகும், பாவங்கள் நிவர்த்தி பெறும்.