அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்கிறது கனவு சாஸ்திரம். நல்ல கனவு என்றால் மகிழ்ச்சி. கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையைக் குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள், அதுபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. அன்று பசுவுக்கு புல்,பழம், கீரை கொடுக்க வேண்டும். அதன் முன்நின்று, தான் கண்ட கனவை மனதிற்குள் சொல்ல வேண்டும். “அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ (அன்னம் போன்றவர்)! நாராயணா! கிருஷ்ணா! என்னைக் காத்தருள வேண்டும்” என சொல்லி திருமாலை வணங்க வேண்டும்.