துளசிபூஜை செய்யும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கணவருக்கு உடல்நலம் சிறக்கும். துளசி செடி இருக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள். தீய சக்திகள் நெருங்காது. வீட்டில் துளசிபூஜை செய்ய மாடம் அமைத்து அதில் துளசியை நட்டு மூன்று மாதம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு வளர்பிறை சுப நாளில் பூஜையைத் தொடங்க வேண்டும். தினமும் காலையில், துளசிக்கு சந்தனம், குங்குமம் இட்டு பால், கல்கண்டு நைவேத்யம் செய்து வணங்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரை நேரத்தில் (காலை 6:00 – 7:00 மணி) கன்னிப்பெண்கள் துளசியை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.