திருப்பரங்குன்றம், பழநி, திருவண்ணா மலை, போன்ற மலை தலங்களில் பவுர்ணமியன்று பக்தர்கள் மலையை சுற்றி வழிபடுவர். முழுமையான புண்ணியம் கிடைக்க குடை பிடித்தோ, செருப்பு அணிந்தோ, வாகனத்திலோ செல்லக்கூடாது. குடையுடன் நடந்தால் கால் பங்கு புண்ணியமும், செருப்பு அணிந்தால் அரை பங்கும் நீங்கும். வெயிலைத் தவிர்க்க காலை, மாலையில் சுற்றி வரலாம்.