Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெருமை சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) பணப்புழக்கம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
16:01

மனிதநேயத்துடன் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் வளர்ச்சி தரும் மாதமாக இது அமையும். ராசிக்கு 11-ல் இணைந்திருக்கும் சூரியன், புதன், 2-ல் உள்ள குரு,  11-ல் உள்ள ராகு நல்ல வளத்தை கொடுப்பார்கள். சுக்கிரன் ஆக.2 க்கு பிறகு உங்கள் ராசிக்கு வந்து நன்மை தருவார். சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருப்பதால் பல்வேறு இடையூறுகளை சந்தித்திருப்பீர்கள். குடும்பத்தில் பகை, பிரிவை ஏற்படுத்துவார். அதற்காக கவலைப்பட வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 3-ம் இடத்துப் பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சூரியனால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். இந்த மாதம் கையில் இருப்பதை நிரந்தர சேமிப்பில் முதலீடு செய்வது நல்லது. புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சமூகத்தில் மரியாதை மேம்படும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். குருவால் பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.

பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.  ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். வீட்டில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். ஆக.2 க்கு பிறகு சுக்கிரனால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள்.  ஆக.10,11 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 25,26 ல் உறவினர்கள் வகையில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப் புண்டு. அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். ஆக.8,9 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருக்கவும்.அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பகைவர் தொல்லை இருக்கும் இடம் தெரியாமல் மறையும்.  வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். புதனால்  தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஜூலை 30,31ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஜூலை17,20,21, ஆக. 12,13,16ல் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஆக. 2க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந் தங்கள் கையெழுத்தாகும்.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூலை 27,28,29ல்  மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கரும்பு, நெல், சோளம், காய்கறி, பழ வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் உயரும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு  அனுகூலமான காலகட்டம். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் பெற்று மகிழ்வர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும். ஜூலை 22,23,24ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: ஜூலை 18,19,22,23,24,30,31 * ஆக.1,2,8,9,10,11,14,15
* கவன நாள்: ஆக. 3,4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட   எண்: 1,9
* நிறம்: பிரவுன், சிவப்பு

பரிகாரம்:

●  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்

 
மேலும் மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை) »
temple
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் ... மேலும்
 
temple
ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் ... மேலும்
 
temple
அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ... மேலும்
 
temple
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!

சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.