Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) கவுரவம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நன்மை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2018
16:53

மனிதநேயமுடன் பிறருக்கு உதவும் மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாய், கேதுவால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சந்திரன் பெரும்பாலும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்று இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால்  முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பொதுவாக குரு பகவான் மனவேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்துப்பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறு அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். அவரால் குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி, வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

செவ்வாய், கேதுவால் பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம்.நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.  கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவும். சகோதரிகள் உதவிகரமாக செயல் படுவர். குறிப்பாக ஆக.1,2 ல் அவர்களால்  மிகுந்த நன்மையை எதிர்பார்க்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  ஜூலை 27,28,29 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். கோரிக்கை நிறைவேறுவதில் சற்று தாமதம் ஆகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். புதன் சாதகமாக இல்லாததால் வேலைப்பளு அதிகரிக்கும். பொறுப்பை தட்டிக் கழிக்காமல் பணியில் ஈடுபடவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். செவ்வாய் பலமாக இருப்பதால் எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். ஜூலை 25,26ல் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறலாம்.  

தொழிலதிபர், வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜூலை 17,ஆக.12,13ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். சனி,ராகுவால் வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி ஏற்படலாம். அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில்
ஏற்பட்ட சோர்வும் ஆக.2க்கு பிறகு மறையும். கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.  பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். வாழ்வில் முன்னேற்றமான நிகழ்வுகள் நடந்தேறும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் பின்தங்கிய நிலை இருக்காது. குருவின்  பார்வை சாதகமாக காணப்படுவதால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகமிருக்கும். சோளம், கேழ்வரகு ஆகிய பயிர்களில் அதிக வருமானம் காணலாம்.  கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபம் வரும்.

பெண்களுக்கு தோழிகள் ஆதரவுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பணிச்சுமை கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதுமில்லை. சிலருக்கு புதிய பதவி தேடி வரும். ஜூலை 18,19, ஆக. 14,15-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.

* நல்ல நாள்: ஜூலை 17, 18,19,25,26,27,28,29 ஆக.1,2,6,7,12,13,14,15
* கவன நாள்: ஜூலை 20,21 ஆக.16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
●  சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  ஞாயிறு ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு.

 
மேலும் மாசி ராசிபலன் (13.2.2019 முதல் 14.3.2019 வரை) »
temple
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் ... மேலும்
 
temple
ஊக்கத்துடன் முயற்சியில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியனும், புதனும் 10-ம் இடத்தில் ... மேலும்
 
temple
அனைவரிடமும் நட்பு பாராட்டும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய் இந்த மாதம் சாதகமான இடத்தில் இருந்து ... மேலும்
 
temple
கடமையில் கண்ணாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

புதன்,சனி, குரு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். ... மேலும்
 
temple
சிந்தனையால் உயர்ந்து நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!

சுக்கிரன் பிப்.25 வரை நன்மை தருவார். அவரால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.