திருமணத்திற்கு வந்த அனைவரும் உணவு உண்டு முடிந்த பின்னும் சமைத்த உணவில் பெரும்பகுதி மீதமாகி இருந்தது. பிராட்டியர் இறைவனிடம் இதனைத் தெரிவித்தார். குண்டோதரனின் ஆற்றலை உணர்த்த இதுவே வாய்ப்பு! எனக் கருதினார் ஈசன். மறுகணம் இறைவனின் திருவிளையாடல் தொடங்கியது. விளைவு குண்டோதரனின் வயிற்றில் வடவைத் தீ புகுந்தது. "பசியால் துடித்த அவன் இறைவனிடம் ஓடி வந்து ""ஐயனே! பசி வருத்துகிறது என்று அலறினான். இறைவன் பிராட்டியை நோக்கினார். பிராட்டியார் குண்டோதரனை அழைத்துச்சென்று அன்னத்தின் முன் விட்டார். அவ்வளவு தான்! இமயமலை போல் குவிந்திருந்த சோறும், கறி வகைகளும் நொடியில் தீர்ந்தன. ஆனால் குண்டோதரனின் பசிதான் தீர்ந்தபாடில்லை! பாவம் குண்டோதரன்! மீண்டும் இறைவனிடம் ஓடி வந்து கோரப்பசி என்று துடிதுடித்தான். அயர்ந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »