திருமணம் முடிந்ததும் வந்திருந்தோரை விருந்து உண்ண அழைத்தார் தடாதகைப் பிராட்டி அப்போது, பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும், இறைவா! பொன்னம்பலத்தின் ஆடி அருளிய திருநடனத்தை தரிசித்த பிறகே நாங்கள் உணவு அருந்துவது வழக்கம்! என்று சிவபெருமானிடம் முறையிட்டனர். ""மதுரையிலேயே அந்நடனத்தை ஆடிக் காட்டுகிறோம்! என்று அவர்கட்டு ஆறுதல் கூறி அருளினார். அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். அங்கே அற்புதம் நிகழ்ந்தது. வெள்ளியம்பலம் தோன்றியது. அங்கே முயலகன் மீது வலது திருவடியை ஊன்றி சுந்தரச் சுடராய் நின்றார் சிவபெருமான். அம்மையார் மீது வைத்த திருநோக்கும் திருநகையும் தோன்றத் திருநடனம் ஆடி அருளினார். அதைக் கண்டு ஆனந்த பரவசமான பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் ""எந்தை இத்திருக்கூத்துடன் எப்போதும் வெள்ளியம்பலத்தே நின்று அனைவரின் பந்த பாசங்களைப் போக்கி அருள வேண்டும்! என்று வேண்டினார். அவ்வாறே வரம் தந்தார்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »