உக்கிர குமார பாண்டியன் 96 அசுவமேத யாகங்கள் செய்து முடித்தான். இதனால் இந்திரன் பொறாமை கொண்டான். 100 யாகங்களை முடித்தால் தன் பதவி பறிபோய்விடும் என்று அஞ்சினான். பாண்டிய நாட்டையே அழிக்கத் திட்டமிட்டான். கடல் அரசனான வருணனின் உதவியை நாடினான். ""ஊழிக்கால வெள்ளம் போல் சென்று மதுரையை அழித்து வா! என்றான். பின்விளைவை அறியாத வருணன் இசைந்தான். கடல் பொங்கியது. பெரு முழக்கம் இட்டுப் பாய்ந்தது மதுரையை நோக்கி பேரிரைச்சலுடன் ஓடியது அது. தூங்கிக் கொண்டிருந்த பாண்டியனின் கனவில் இறைவன் தோன்றி எச்சரித்தார். கனவு கலைந்து எழுந்த உக்கிர பாண்டியன் அமைச்சர்களுடன் வந்து பார்த்தான். பேரொலியுடன் திரண்டு வரும் கடல் வெள்ளம் கண்டு வியந்தான். இறைவன் சித்த மூர்த்தியாய் நேரில் தோன்றி, "தாமதிக்காமல் உன் வேற்படையை எறி! என்று கட்டளையிட்டார். உக்கிரப்பாண்டியன் வேலை ஏந்தி, வலமாகச் சுழற்றி கடல் மேல் எறிந்தான். வேலின் நுனி பட்டதுமே கடல் வற்றியது வலிமை இழந்தது. மதுரை மாநகரும் காக்கப்பட்டது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »