மணவூரை ஆண்டுவரும் சூரியகுல மன்னன் சோமசேகருக்கு ஒரு மகள், பெயர் காந்திமதி, முருகனுக்கேற்ற வள்ளி. ஒரு நாள் சோமசேகரின் கனவில் சோமசுந்தரக் கடவுள் தோன்றி உன் மகளுக்கு ஏற்ற கணவன் மதுரையில் இருக்கின்றான்! என்று கூறி அருளினான். அமைச்சர்களிடம் தன் கனவை கூறி மதுரைக்குப் புறப்பட்டான் சோமசேகர். நன்னாளில் உக்கிர பாண்டியனுக்கும் காந்திமதிக்கும் விண்ணோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடைபெற்றது. சுந்தரபாண்டியர் ஒரு நாள் தன் மகனை அழைத்து, "மகனே, இந்திரனும், கடலரசனும் உனக்கு என்றுமே பகைவர். மேரு மலையும் கர்வம் கொண்டுள்ளது. எனவே இந்திரன் முடி சிதற இந்த வளையை ஏறி! கடல் வற்ற இவ்வேலை விடு! மேரு மலையின் கர்வம் தவிடுபொடியாக இச்செண்டால் அடி! என்று கூறி வளை, வேல், செண்டு ஆகிய முப்படைகளையும் உக்கிர பாண்டியரிடம் தந்தார். தொடர்ந்து உக்கிர பாண்டியனுக்கு முடி சூட்டினார். தாமும் தேவியும் கோவிலிற்குள் சென்று திருக்கொலு வீற்றிருந்து அருளினார். உக்கிர குமார பாண்டியன் நாட்டை ஆண்டு வந்தான்.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »