Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) சுற்றுலா மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுப நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சுப நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
05:08

யாரையும் குறை கூற விரும்பாத கும்ப ராசி அன்பர்களே!

குரு,சனி,ராகு,சுக்கிரனால் அளப்பரிய நன்மை உண்டாகும். புதன் ஆக.28 வரையும் செப்.14க்கு பிறகும் சாதகமான நிலையில் இருந்து நற்பலன் கொடுப்பார். குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம். அவரால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். கடந்த கால பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலமும் நற்பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில்  பொருளாதார வளம் பெருகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடம்பர வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். ஆக. 28 முதல் செப். 14 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிற்சில விஷயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். ஆக.21,22,23ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். செப்.2,3ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக. 26,27ல் பெண்களால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.14 க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்ற த்தைக் காணலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கோரிக்கைகளை ஆக.28க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன் பிறகு பணிச்சுமையை சந்திக்க  நேரலாம். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். ஆக. 29,30ல் எதிர்பாராத நன்மை உண்டாகும். செப்.14க்கு பிறகு வேலைப்பளு குறையும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும்.  மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும். ராகுவால் லாபத்திற்கு குறைவிருக்காது. சேமிக்கும் விதத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். செப். 6,7ல் திடீர் பண வரவு வர வாய்ப்புண்டு. செப்.14க்கு பிறகு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு. வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெறலாம். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.  குருபலத்தால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பெற்றோரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கல்வியில் சிறப்பான நிலையை அடைவர். தேர்வில் அதிக  மதிப்பெண்கள் கிடைக்க பெறுவர்.  விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறுவர். குறிப்பாக நெல், கோதுமை, பழ வகைகள், கிழங்கு வகைகள் போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபத்தைக் காண்பர். புதிய சொத்து வாங்க அனுகூலமான காலம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.  

பெண்களுக்கு பொன், பொருள் சேரும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடந்தேறும். மாத முற்பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் காண்பர். செப்.8,9,10ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆக.31,  செப்.1ல் எதிர்பார்த்த சுபசெய்தி தேடி வரும்.

* நல்ல நாள்: ஆக.19,20,21,22,23,26,27,31, செப்.1,6,7,8,9,10,15,16
* கவன நாள்: செப். 11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 7,9  
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
●  தினமும் காலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
●  செவ்வாயன்று  ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு
●  புதனன்று குலதெய்வ கோயிலில் பாசிப்பயறு தானம்

 
மேலும் சித்திரை ராசி பலன் ((14.4.2026 முதல் 14.5.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினிநேர்மையாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்சக்காரகன் கேது, பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிலும் தெளிவாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்விடாமுயற்சி செய்பவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar