Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுபநிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுபநிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:09

நேர்மை வழியில் நடக்க விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் முற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த சூரியன் தற்போது சாதகமாகிறார். புதன் அக்.3 வரை நன்மை தருவார். குருபகவான் அக்.4 வரை சாதகமான நிலையில் இருக்கிறார். அதன் பிறகு குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் பெருகும்.  சமூக மதிப்பு  சிறப்பாக இருக்கும். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அக்.4வரை குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை நடத்த துணைபுரிவார்.  செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதனால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். அக்.3க்கு பிறகு குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு, பிரிவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. அக்.3க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள். வெளியூர் பயணம் சாதகமான பலனைக் கொடுக்கும். சூரியனால் புதிய வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் படிப்படியாக விலகும். நிர்வாகத்தில் இனி அனாவசிய செலவு இருக்காது. அக்.8,9ல் எதிர்பாராமல்
வருமானம் வர வாய்ப்புண்டு.  செப் 25,26, 29,30, அக்.1ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சனியால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். அக்.3க்கு பிறகு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்துவது போதுமானது. செவ்வாயால் பொருள் களவு போக வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமற்று காணப்படுவதால் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தடை குறுக்கிடலாம். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு நற்பலன் எதிர்நோக்கலாம். புகழ், கவுரவத்திற்கு  குறையிருக்காது. பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பலன் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அக்.3க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். நண்பர்களால் உதவி உண்டு.  விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். அதிக உழைப்பு வேண்டியதிருந்தாலும் அதற்கான வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த  வருமானம் இருக்காது.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அக்.4க்குள்  கைகூடும். கணவரிடத்தில் அன்பும், ஆதரவும் பெருகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக். 2,3ல் புத்தாடை, அணிகலன் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப்பெறலாம். அக்.10,11ல் விருந்து, விழா என சென்று வருவர். சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர். அக். 3-க்கு பிறகு புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிதானம் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் செய்யவும்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.

* நல்ல நாள்: செப்.20, 21, 22, 23, 24, 27, 28, அக்.2, 3, 8, 9, 10, 11, 17
* கவன நாள்: அக்.12, 13, 14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 9    நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  வெள்ளிக்கிழமையில்  அம்மனுக்கு அர்ச்சனை
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar