Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுபநிகழ்ச்சி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குதூகலம் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:15

குடும்பத்தினர் மீது அன்பு மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இம்மாதம் பிற்பகுதியில் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். புதன் அக்.3க்கு பிறகும், குருபகவான் அக்.4க்கு பிறகும் நன்மை தர காத்திருக்கின்றனர். ராகு மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார் அக்.4ல் குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது உயர்வான நிலை. குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி தடையின்றி நிறைவேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தேவைகள் குறையின்றி பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும்.  

ராகு செயலில் அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். இருப்பினும் வீண்செலவை குறைத்து சிக்கனம் பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் அக்.3 வரை சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. அக்.3க்கு பிறகு  எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். அதே நேரத்தில் சனிபகவான் உங்கள் முயற்சிகளில் தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம்.

பணியாளர்கள் அக்.3 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். செப்.22,23,24 ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது. அக்.3க்கு பிறகு பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.

தொழில், வியாபாரத்தில் இருக்கும் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். ஆனால் இந்த மாதம் பகைவர் தொல்லை குறுக்கிடலாம். அக்.10,11ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பிறக்கும்.  செப்.27,28,அக்.2,3ல்  முயற்சிகளில் தடைகள் வரலாம். சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி கிடைக்காது.  அக்.4க்கு பிறகு கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  புதிய வியாபார முயற்சி அனுகூலம் தரும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கிடைக்கும். நற்பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வராது.  அரசியல்வாதிகள், பொது நலசேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். தொண்டர் வகையில் அதிக பணம் செலவாகும். சிலருக்கு வீண் அலைச்சல், பொருள் நஷ்டம் வரலாம். மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம்  சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே தேர்ச்சி கிடைக்கும். அக்.3க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நிலைமை சீராகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும்.  

விவசாயிகளுக்கு  உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். கோதுமை, பழவகைகள் போன்றவற்றில் எதிர்பார்த்த விளைச்சல்  இருக்கும். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் தாமதமாகலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. வழக்கு, விவகாரத்தில் பின்னடைவை சந்திக்கலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் அக்.3 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் குடும்பத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களால் குடும்பவாழ்வு சிறக்கும். அக்கம் பக்கத்தினர்களால் நன்மை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

* நல்ல நாள்: செப்.22, 23, 24, 25, 26, 29, 30, அக்.1, 4, 5, 10, 11, 12, 13, 14
* கவன நாள்: செப்.17, 18, 19, அக்.15, 16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5, 8    நிறம்: நீலம்,மஞ்சள்

பரிகாரம்:
●  அதிகாலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  புதன்கிழமை காலை குலதெய்வ வழிபாடு

 
மேலும் பங்குனி ராசிபலன் (15.3.2019 முதல் 13.4.2019 வரை) »
temple
நல்லதை மட்டுமே சிந்திக்கும் மேஷ ராசி அன்பர்களே!

சூரியனும், ஏப்.9ல் புதனும் சாதகமற்ற இடத்திற்கு ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்தால் வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், குருபகவான் நற்பலன் வழங்குவர். ... மேலும்
 
temple
கலையுணர்வுடன் ரசித்து வாழும் கடக ராசி அன்பர்களே!

சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். புதன் ஏப்.8 ... மேலும்
 
temple
சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.