Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) உற்சாகம் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மேன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2018
15:13

துணிவுடன் சவாலை சந்திக்கும் துலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் குரு, சுக்கிரன், சனி சாதகமான இடத்தில் உள்ளனர். இதனால் பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால்  பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்வீர்கள். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.  குடும்பத்தில் புதனால் ஏற்பட்ட பிரச்னை, உறவினர் தொல்லை, பொருள் இழப்பு முதலியன அக். 23க்கு பிறகு மறையும்.
சுக்கிரனால் பெண்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நவ. 6,7,8ல் சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். அவர்களால் பணஉதவி கிடைக்கும். அக்.18,19, நவ.13,14,15ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். அவர்களிடம்  நெருக்கம் வேண்டாம். ஆனால் நவ.2,3ல் உறவினர் ஆதரவால் முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவர். ஆனால், வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. குரு சாதகமான இடத்தில் இருப்பதால் கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகள் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். அக்.31, நவ.1 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். நவ.13க்கு பிறகு புதனால்  இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.  

தொழில், வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். சனியின் பலத்தால் லாபம் அதிகரிக்கும். நவ.4,5,9,10ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். அக்.22,23ல் எதிர்பாராத  வருமானம் கிடைக்கும். சனிபகவான் தொழில் விருத்தியை வழங்க காத்திருக்கிறார். எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். சுக்கிரனால். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும். செவ்வாயின் தாக்கத்தால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து அக்.27க்கு பிறகு விடுபடுவர்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். ரசிகர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி பெறுவதில் இழுபறி நீடிக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமுக மதிப்பு சுமாராக இருக்கும். அக்.20,21, நவ.16ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் முன்னேற்றம் உண்டாகும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புண்டு. இருப்பினும் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சற்று கவனம் தேவை. விவசாயிகள் சீரான மகசூலைப் பெறுவர். மஞ்சள், காய்கறிகள், கீரை வகைகள், மொச்சை பயறு வகைகளில் வருமானம் அதிகரிக்கும். கால்நடை வகையில் சுமாரான லாபம் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்க விடாமுயற்சி தேவைப்படும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு குருவின் பலத்தால் சுபநிகழ்வுகள் நடந்தேறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் உயரும். நவ.11,12 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும்.  புத்தாடை, அணிகலன்கள் சேரும். அக்.24,25,26ல் குடும்பத்துடன் விருந்து, விழா என செல்வீர்கள். நவ.13க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். சூரியனால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். செவ்வாயால் அக்.27க்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கலாம்.

* நல்ல நாள்: அக்.22,23,24,25,26,31 நவ.1,2,3,6,7,8,11,12
கவன நாள்: அக்.27,28 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: மஞ்சள், நீலம்

* பரிகாரம்:
●  செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
●  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
●  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.