Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) அரசு வகையில் அனுகூலம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆடம்பர வசதி பெருகும்

பதிவு செய்த நாள்

18 டிச
2018
11:12

இந்த மாதம் நன்மை அதிகரிக்கும். திருப்தியற்ற நிலையில் இருந்த சூரியன் தற்போது ராசிக்கு 10-ம் இடம் வந்து நற்பலனை வாரி வழங்குவார். புதன் டிச.28க்கு பிறகு தனுசு ராசிக்கு வந்து நன்மையளிப்பார். இதுதவிர சுக்கிரன் ஜன.1ல் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறினாலும் நன்மையே தருவார். ராசிக்கு 9ல் இருக்கும் குருபகவான் மற்றும் 11ல் இருக்கும் கேதுவால் நன்மை தொடரும்.  

குடும்பத்தில் ஆடம்பர வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சேமிக்கும் விதத்தில் பணவரவு இருக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். டிச.16,17, ஜன.12,13ல் அவர்கள் மூலம் நன்மை காண்பீர்கள். டிச.23,24ல் உறவினர் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

ஆனால் ஜன.7,8,9ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். சிலர் டிச.28 வரை சிலர் வீண் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். அதன் பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபவிஷய பேச்சுகள் நடந்தேறும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும்.

பணியாளர்கள் டிச.28 வரை வேலையில் பொறுமையைக் கடைபிடிக்கவும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். முக்கிய பணிகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதன் பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.  சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஜன.5,6ல் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.
வியாபாரிகள் கடந்த மாதம் மனஉளைச்சலோடு தவித்து இருப்பீர்கள் இந்த மாதம் நிலைமை உங்களுக்கு சாதகமாக அமையும்.  லாபம் அதிகரிக்கும்.  டிச.18,19, ஜன.10,11,14ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.  டிச.27,28ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வலிமை பெறுவீர்கள். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள்  டிச.28க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.

கலைஞர்கள் பாராட்டைப் பெற்று மகிழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பர வசதி பெற்று மகிழ்வர்.  அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு அடைய வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். டிச.28 வரை சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். அதன் பிறகு புதன் சாதகமான இடத்திற்கு வருவதால்  கல்வியில் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் பங்கேற்றால் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருவாய் பெறுவர். டிச.28க்கு பிறகு கால்நடை வளர்ப்பில் வருமானம் கூடும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். குருவால் மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் கூட  உங்களின் மேன்மை அறிந்து சரணடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். டிச.29,30ல் சிறப்பான பலனைக் காணலாம். சகோதரர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். டிச.20,21,22ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.

* நல்ல நாள்: டிச.16, 17, 20, 21, 22, 27, 28, 29, 30, ஜன.5, 6, 7, 8, 9, 12, 13
* கவன நாள்: டிச.31, ஜன.1  சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 9
* நிறம்:மஞ்சள்

பரிகாரம்:

●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
●  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar