Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)  நினைத்தது நிறைவேறும் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத நன்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) எதிர்பாராத நன்மை

பதிவு செய்த நாள்

13 மார்
2019
04:03

திட்டமிட்டு செயலாற்றி வரும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் தொடர்ந்து நற்பலனை வாரி வழங்குவார். புதன் ஏப்.9ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரன் மார்ச் 22 வரை நன்மை செய்வார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் 7ம் இடத்துப் பார்வையால் நன்மை உண்டாகும்.   

பொருளாதார வளம் கூடும். சமூக மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு சாதகமான காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படையுங்கள். குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.

பெண்களால் பொன், பொருள் சேரும். குறிப்பாக மார்ச்9,10ல் அவர்கள் மூலம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். விருந்து, விழா என செல்வீர்கள். மார்ச் 19,20ல் உறவினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் ஏப்.3,4,5ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு உழைப்புக்கு தக்க பலன் கிடைக்கும். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. ஏப்.1,2ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ராகுவின் சாதகமற்ற பலத்தால் இருப்பதை திறமையாக நடத்தினால் போதும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பகைவர் சதி எடுபடாது.
அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். மார்ச் 23,24ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மார்ச் 15,16, ஏப்.6,7,8,11,12ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஏப்.9க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டை எதிர்பார்க்கலாம்.  மார்ச் 22க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும்.  மறைமுகப்போட்டியும் அதிகரிக்கும்.  
பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மார்ச் 21,22ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வேலை அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. நெல், கோதுமை, மஞ்சள், சோளம், கேழ்வரகு போன்றவற்றில் அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் பெருகும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வேலையில் அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக வருமானம் காண்பர்.  மார்ச்17,18, ஏப்.12 ல் சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  மார்ச் 25,26,27 சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் விரோதம் வரலாம்.  உடல்நிலை சீராக இருக்கும்.

* நல்ல நாள்: மார்ச் 17, 18, 23, 24, 25, 26, 27, ஏப்.1, 2, 3, 4, 5, 9, 10, 13
* கவன நாள்: மார்ச் 28, 29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 7, 9  நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்:
*  செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
*  கேதுபகவானுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar