Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பிள்ளைகளால் மகிழ்ச்சி கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) போட்டியில் வெற்றி கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பெண்களால் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2019
16:50

சிந்தித்து செயலாற்றி வரும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, ராகுவால் இந்த மாதம் நன்மை உண்டாகும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். குருபகவானால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரவழியில் மேன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய், சூரியன், புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிரச்னையைச் சந்தித்து வரும் உங்களுக்கு ஏப்.8க்கு பிறகு நிவாரணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

புதனால் மனதில் குழப்பம் ஏற்படலாம்.  மனைவியால் மனக்கவலை ஏற்படும். மார்ச் 15,16, ஏப்.11,12ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மார்ச் 25,26,27ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மார்ச் 20க்கு பிறகு அண்டை வீட்டாரால் தொல்லை ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.  ஏப்.8 க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும். பிரிந்த குடும்பம் மீண்டும் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.  ஆடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு.  

பணியாளர்களுக்கு சகஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர். சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. இருப்பினும் பணிச்சுமையை சுமக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். ஏப்.9,10ல் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஏப்.8க்கு பிறகு  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் பணிச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பிறரது உதவியை நாடாமல் எதையும் சாதிக்க முடியும்.  

வியாபாரிகள் கடின உழைப்பு, விடாமுயற்சியால் வருமானம் காண்பர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அறிந்து செயல்படுவது நல்லது. அரசு வகையில் பிரச்னை வரலாம். எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். மார்ச் 30,31 ஏப்.12,13ல் அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். மார்ச்17,18,21,22 ஏப்.13ல் சந்திரனால்  சிறுதடைகள் வரலாம். கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மார்ச் 22க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலன் பெறுவர். மார்ச் 20க்கு பிறகு மறைமுகப்போட்டிகள் அதிகமிருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மார்ச் 28,29ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். ஏப்.6க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  

விவசாயிகள் உழைப்பிற்கேற்ப வருமானம் காண்பர்.  இன்று விதைத்தால் நாளை தானே பலன் கிடைக்கும் என்பதை மனதில் ஏற்று உழையுங்கள். தற்போது மஞ்சள், காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் அக்கம்பக்கத்தினரின் அனுசரணையுடன் இருப்பர். ஆடம்பர செலவை குறைப்பது நல்லது. குருவால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள்  பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். வேலையில் பொறுமை தேவை.

ஏப்.8க்கு பிறகு  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் திறமை பளிச்சிடும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.

* நல்ல நாள்: மார்ச் 15, 16, 19, 20, 23, 24, 30, 31, ஏப்.1, 2, 9, 10, 11, 12
* கவன நாள்: ஏப்.3, 4, 5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3, 5     நிறம்: மஞ்சள், நீலம்

பரிகாரம்:
*  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
*  சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை
*  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசிமாலை

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.