Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) உறவினரால் நன்மை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அபார வளர்ச்சி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2019
11:46

இந்த மாதம் சூரியன் 6ம் இடத்தில் நின்றும், சுக்கிரன் 5ம் இடத்தில் நின்றும் நற்பலன் கொடுப்பார்கள். புதன் மே29 வரை நன்மை தருவார். உங்கள் ராசியில் இருக்கும் சனி, கேது, குரு,7ல் இருக்கும் செவ்வாய், ராகுவால் எந்த பலனையும் பெற முடியாது. தற்போது உங்கள் ராசியில் இருக்கும் குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான இடம் தான். அவரால் தொல்லைகள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.

முக்கிய கிரகமான சூரியன், சுக்கிரன் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். குடும்பத்தில் புதனால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். மே28க்கு பிறகு கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

மே21,22,23ல்  பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே16,17,18, ஜூன்13,14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் மே29,30ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். மே28க்கு பிறகு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மே15, ஜூன்11,12ல் அனுகூலமான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரிகள் முக்கிய பொறுப்புகளை மற்றவர் வசம் ஒப்படைக்க வேண்டாம். பொருளாதாரம் சீராக இருக்கும். கூட்டாளி களிடையே ஒற்றுமை ஏற்படும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். மே19,20,24,25, ஜூன்15ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன்2,3,4ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மே 26க்கு பிறகு அலைச்சல் ஏற்படலாம். வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதிபடலாம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜூன்3க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவர். பிரதி பலனை எதிர்பாராமல் பாடுபட நேரிடும். மே31 ஜூன்1ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காணலாம். மே28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால்  சிரத்தை எடுத்து படிப்பது அவசியம்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். நெல், சோளம் பழ வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.

பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சுற்றுலா செல்வர் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.
மே26,27,28ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருட்கள் வந்து சேரும். ஜூன்5,6ல் விருந்து விழா என செல்வர். சகோதர வகையில்  உதவி கிடைக்கும். தொழிலில் ஈடுபடும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். கேதுவால் அக்கம்பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும்.  சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். ஆரோக்கியம் மேம்படும்.

* நல்ல நாள்: மே 15,16,17,18,21,22,23,26,27,28, ஜூன் 2,3,4,5,6,11,12,13,14
* கவன நாள்: ஜூன் 7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்:
● ராகு காலத்தில் துர்க்கை, பைரவர் வழிபாடு
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு விளக்கு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2019 முதல் 15.6.2019 வரை) »
temple
குரு உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் நின்று நன்மை தரப் போகிறார். ஆனால் மே18ல் அவரது அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அப்போது ... மேலும்
 
temple
ராசிக்கு 7 ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் மே18 வரை கிடைக்கும். அதன் பிறகு அதிசார காலம் முடிந்து ... மேலும்
 
temple
குருபகவான் மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது  அவர் ... மேலும்
 
temple
ராசிக்கு 11-ம் இடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், ராகு, 10-ம் இடத்தில் இருக்கும் சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.