Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1, 2) சூரியனால் சுகவாழ்வு கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1, 2) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிறப்பான மாதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிறப்பான மாதம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

ராசிக்கு 11ல் இணைந்து இருக்கும் புதன், சூரியன், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். செவ்வாய் 11ம் இடமான மிதுனத்தில் இருந்து ஜூன் 24வரை நன்மை தருவார்.  அதன் பின் அவர் கடகத்திற்கு வருவதால் நன்மை தரமாட்டார். சுக்கிரனை பொறுத்தவரை ஜூன் 29க்கு பிறகு மிதுனத்திற்கு மாறி நன்மை தருவார். எனவே சிறப்பான மாதமாக இருக்கும். பொருளாதார வளம் பெருகும். கையில் எப்போதும் பணம் புழங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். குரு 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பானது என சொல்ல முடியாது. குரு மன உளச்சலையும்,அக்கம் பக்கத்தினர்  வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்.  

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்தேறும். ஜூன் 29க்கு பிறகு பணவரவு அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக ஜூலை 6,7ல்  அவர்களால் பண உதவி கிடைக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அதே நேரம் ஜூன் 2,3ல் விருந்தினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஜூலை10,11,12ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.

அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சகஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஜூன்30, ஜூலை1 சிறப்பான நாட்களாக இருக்கும்.


பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் திருப்திகரமான சூழ்நிலையில் இருப்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஜூன்24க்குள் கேட்டு பெறவும்.  

தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஜூலை4,5,8ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 20,21ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு. சனியின் பாதிப்பால் வாடிக்கையாளர்  மத்தியில் குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

கலைஞர்களுக்கு ஏற்பட்ட எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் முதலியன ஜூன்29க்கு பிறகு மறையும். அதன் பிறகு பின்தங்கிய நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நன்மை அடைவர். அவர்களின் வாழ்வில் வசந்தம் பிறக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். ஜூன்24க்கு பிறகு சுமாரான நிலையில் இருப்பர். ஜூலை18,19ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.  

மாணவர்களுக்கு  புதன் சாதகமாக இருப்பதால்  போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு  பெறுவர்.


விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த  வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் மாத முற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். வழக்குகளில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. ஜூன் 24க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். கோயில் மற்றும் புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள். புதிதாக மணமான பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். ஜூன் 22,23,24 ஆகியவை நல்ல நாட்களாக அமையும். சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். ஜூலை10,11,12ல் விருந்து விழா என செல்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருட்கள் வரப் பெறலாம். உடல்நிலை பூரண குணம் அடையும்.

* நல்ல நாள்: ஜூன் 20,21,22,23,24,30, ஜூலை1,2,3,6,7,10,11,12
* கவன நாள்: ஜூன் 25,26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7
* நிறம்: பச்சை,சிவப்பு

பரிகாரம்
●  சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
●  செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar