Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: புரட்டாசி ராசி பலன் (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பெண்களால் நன்மை கன்னி: புரட்டாசி ராசி பலன் (உத்திரம் ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம்

பதிவு செய்த நாள்

16 செப்
2019
03:09

கடந்த மாதம் போலவே ராகு, சுக்கிரன் மட்டுமே நற்பலன் தரும் நிலையில் உள்ளனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். ராகுவால் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். ஆற்றல் மேம்படும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.

சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சுக்கிரனால் அக்.5க்கு பிறகு  பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.26,27ல் சகோதரிகளால் முன்னேற்றம் காணலாம். அவர்கள் வகையில் பணம் கிடைக்கும். செப்.22,23ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் அக்.3,4ல் அவர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. .

சுக்கிரனால் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர்.  விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கான நற்பலன் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  செப்.20,21, அக்.17ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண்கவலை முதலியன செப்.25க்கு பிறகு மறையும். அதன் பிறகு மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனால் அக்.5க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு சுக்கிரனால் அரசின் சலுகை கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரத்தில் அதிக முதலீடு வேண்டாம். செப்.24,25,28,29ல் சந்திரனால் தடைகள் வரலாம். அக்.7,8,9ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமையை கேதுவால் பெறுவீர்கள்.  செப்.25க்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.  அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.  மாணவர்கள் இம்மாதம்  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது.  வீண்பொழுது போக்குகளை தவிர்ப்பது அவசியம்.   

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான நற்பலன் கிடைக்கும். காய்கறி, பழவகைகள், மானாவாரி பயிர்கள் போன்றவற்றில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் காணலாம். புதிய சொத்து வாங்கும்  எண்ணத்தை தள்ளி வைக்கவும்.  

பெண்கள் குடும்பத்தாரிடம் அனுசரித்து போவது நல்லது. ஆனால் ராகு, சுக்கிரனால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் குறைவின்றி பூர்த்தியாகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர். செப்.30, அக்.1,2ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். அக்.10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

* நல்ல நாள்: செப்.20,21,22, 23,26,27,30, அக்.1,7,8,9, 10,11,17
* கவன நாள்: அக்.12,13,14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8
* நிறம்: வெள்ளை, நீலம்

பரிகாரம்
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
●  ஞாயிறன்று நீராடியதும் சூரிய நமஸ்காரம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar