பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
பிறரைக் கவரும் விதத்தில் செயல்படும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் வாக்கு ஸ்தானத்தில் நீசம் பெற்ற சூரியன், உச்சம் பெற்ற சனியுடன் உள்ளார். இதனால் தேவையற்ற விஷயங்களை பேசி சிரமங்களை எதிர்கொள்கிற சூழ்நிலை உள்ளது. கவனம். நற்பலன் வழங்குகிற கிரகங்களாக செவ்வாய், சுக்கிரன், ராகு, குரு செயல்படுகின்றனர். பசு, பால் பாக்ய யோகம் உண்டாகும். தம்பி, தங்கைகளுக்கு சுபவிஷயம் நடந்தேறும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு நிம்மதி தரும். கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்குவர். ஆரோக்கியம் சீர்பெற தகுந்த மருத்துவ சிகிச்சை, ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும். குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி தம்பதியர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். உறவினர் வீட்டு விசேஷநிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்வீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தியை மேம்படுத்துவதில் அக்கறை கொள்வர். புதிய ஒப்பந்தத்தால் ஆதாயம் கூடும். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பர். புதிய கிளை துவங்கும் முயற்சியிலும் ஈடுபடுவர். பணியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். சேமிப்பிலும் அக்கறையுடன் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் திறமையை பயன்படுத்தி பணியில் வளர்ச்சி காண்பர். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை சீராக்கி வளர்ச்சி அடைவர். அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலகுவது நல்லது. புதிய பதவி பெறுவதில் அனுகூலம் உண்டு. விவசாயிகள் மகசூல் சிறப்பதோடு கால்நடை வளர்ப்பிலும் நற்பலன் பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சியும், ஆசிரியர் மத்தியில் பாராட்டும் பெறுவர்.
பரிகாரம்: மீனாட்சியை வழிபடுவதால் ஆரோக்கியம் மேம்படும்.
உஷார் நாள்: 29.10.12 அதிகாலை 1.21 - 31.10.12 பகல் 12.21
வெற்றி நாள்: அக்டோபர் 18, 19
நிறம்: சிவப்பு, வாடாமல்லி,எண்: 1, 9.