பதிவு செய்த நாள்
09
அக்
2012
04:10
உண்மை, நேர்மையை உயிராக மதித்து நடக்கும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாம் இடத்தில் நீசம் பெற்று இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். செவ்வாய் நவம்பர் 6ம் தேதிக்குப் பின் சிறந்த நலன் தருவார். ராசியில் உச்ச பலத்துடன் உள்ள சனிபகவான் உங்கள் மனதில் நேர்மைச் சிந்தனையை அதிகப்படுத்துவார். இதனால் நல்லவர்களின் தொடர்பும் உதவியும் எதிர்பாராத வகையில் கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். புத்திரர் தகுதி, திறமை வளர்ப்பில் முன்னேற்றம் காண்பர். படிப்பு, வேலைவாய்ப்பில் நன்னிலை உண்டு. உடல்நலத்திற்கு ஒவ்வாத நடைமுறை பழக்கங்களில் மாற்றம் செய்வது நல்லது. நண்பர்களுக்கு உதவுவது, உதவி பெறுவது ஆகிய செயல் உண்டாகும். தம்பதியர், உறவினர் செயல் தொடர்பான விவாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழிலதிபர்கள் கண்டிப்பான கொள்கைகளை பின்பற்றி உற்பத்தி இலக்கை உயர்த்துவர். வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு சலுகை தந்து விற்பனை இலக்கில் முன்னேற்றம் பெறுவர். பணியாளர்கள் சொந்த வேலைகளைத் தவிர்த்து பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். குடும்ப பெண்கள் கணவருக்கு நல்ல ஆலோசனை தந்து அவர் உடல்நலத்திலும் அக்கறை கொள்வர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி நிர்வாகத்தின் கண்டிப்பை தவிர்ப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு பெறுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் பணவரவைத் தரும். அரசியல்வாதிகளுக்கு நவம்பர் 6ம் தேதிக்குப்பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகள் அதிக பலன்தரும் பயிர் வகைகளை நடவு செய்வதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கம் குறைத்து படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தைரியமும் புகழும் சேரும்.
உஷார் நாள்: 31.10.12 பகல் 12.21 முதல் 2.11.12 நள்ளிரவு 12.01 வரை
வெற்றி நாள்: அக்டோபர் 20, 21
நிறம்: வெள்ளை, சந்தனம்,எண்: 3, 6