பதிவு செய்த நாள்
31
டிச
2023
12:12
உத்திராடம்; முயற்சி வெற்றி தரும்
சூரியபகவான்
நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குரு
பகவான் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான்
ராசிநாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் 2024 ஆண்டு உத்திராடம் 1ம்
பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனி பகவானாலும், 5ம் இட குருபகவானாலும்
அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும். தொழிலில் முன்னேற்றம். வாழ்க்கையில் உண்டான
சங்கடங்களில் இருந்து விடுதலை. நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் நிலை.
சமுதாயத்தில் அந்தஸ்து, இழந்தவற்றை மீட்டெடுக்கும் ஆற்றல், குடும்பத்தில்
சுபநிகழ்வுகள், சொத்து சேர்க்கை என ஆதாயப் பலன்களை வழங்கும். 2,3,4ம்
பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகுவால் அதிர்ஷ்ட நிலை உண்டாகும்
வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும்.
தொழிலில் இருந்த தடைகள் விலகும். சிலர் தொழிலை வளர்ச்சி செய்வீர்கள்.
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஜென்ம சனி முடிந்திருப்பதால்
சங்கடம் குறைய ஆரம்பிக்கும்.
சனி சஞ்சாரம்
கும்பத்தில்
சஞ்சரிக்கும் சனிபகவானால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும்
வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம்
விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில்
பிறந்தவர்களுக்கு மார்ச் 16 - ஜூன் 19, நவ.4 - டிச.31 வரையிலும்
அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். சனிபகவானின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும்
சங்கடம் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி,
தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும்.
ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு
முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில்
முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10ம் இட கேதுவும்
அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில்
தடைகள், வருமானத்தில் இழுபறியை உண்டாக்குவர். முயற்சிகளில் ஏமாற்றத்தை
வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ம் இடத்தில்
சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் தொழிலில்
முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி
என்ற நிலையை உண்டாக்குவர். நன்மைகளை அதிகரிப்பர். துணிச்சலாக செயல்பட்டு
நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்துவர். அந்தஸ்தையும்
செல்வாக்கையும் உயர்த்துவர்.
குரு சஞ்சாரம்
உத்திராடம் 1ம்
பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்
குரு பகவான் வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, குடும்பத்தில்
சுபநிகழ்ச்சி, புதிய தொழில் முயற்சி. பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம்,
சமூக அந்தஸ்தை வழங்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1
முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்.
அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள்
நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடி
வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்
பிப்
13 - மார்ச் 13, மே 14 - ஜூன் 14 வரையிலும் மற்றும் செப். 17 - நவ.15
வரையிலும் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15
- ஜூலை 16 வரையிலும் மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும் 2,3,4 ம்
பாதங்களில் பிறந்தவர்களுக்கும் சூரியனால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்வில்
எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். பிரச்னைகள் விலகும். நீண்டகால வழக்குகள்
உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு
கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த பாதிப்பு
நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆற்றல் வெளிப்படும்.
பொதுப்பலன்
2024
ல் உங்களில் சிலருக்கு சனிபகவானும், குருபகவானும் சாதகமான நிலையில்
உள்ளனர். சிலருக்கு ராகு பகவானும், மே1 முதல் குரு பகவானும் அதிர்ஷ்டத்தை
வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம்
அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி
உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பணியில் இருந்த பிரச்னை நீங்கும்.
வேலைத் தேடியவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு
திருமணம் முடியும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.
தொழில்
தொழிலில்
அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
விவசாயம், இயந்திரத்தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள்,
ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல்
எஸ்டேட் போன்றவை வளர்ச்சியடையும்.
பணியாளர்கள்
தனித்திறன்
வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக
முதலாளியின் பாராட்டையும் பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு
அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் மேலதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவர். உங்கள்
உழைப்பு மதிக்கப்படும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.
பெண்கள்
குடும்பத்தில்
இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உங்கள் அணுகுமுறையால்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம்
என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு
அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளி
வட்டாரத்திலும், அலுவலகப் பணியிலும் செல்வாக்கு உயரும். பொன், பொருள்
சேர்க்கை உண்டாகும்.
கல்வி
படிப்பில் கவனம் அதிகரிக்கும். அதிக
மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை
ஏற்பீர்கள். முயற்சி வெற்றியாகும்.
உடல்நிலை
உடல் நிலையில்
பிரச்னைகள் தோன்றும். உறக்கம், நிம்மதிக்கு சங்கடம் ஏற்படும். யோகா,
தியானத்தால் தீர்வு உண்டாகும். சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால்
பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சை, சரியான உணவு முறையால் நிவாரணம்
கிடைக்கும்.
குடும்பம்
இதற்கு முன்பிருந்த சங்கடம் விலக
ஆரம்பிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை
பாக்கியம், புதிய வீட்டில் குடியேறுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும்.
தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக
திட்டமிட்டு செயல்படுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை
மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்; திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர், பழநி முருகனை வழிபட்டு வர வாழ்க்கை வளமாகும்.
திருவோணம்; உழைப்பால் உயர்வீர்கள்
சந்திரன், சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆண்டு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறது. இதற்கு முன்பிருந்த சங்கடமான பலன்கள் உண்டாகாது. இக்காலம் ஏழரை சனியின் கடைசி காலம் என்பதால் நெருக்கடி இனி ஏற்படாது. சனிபகவானும் இதுவரை அவர் வழங்கிய சங்கடங்களுக்கு ஆறுதல் புரிவது போல் நற்பலன்களை தருவார். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். செயல்களில் லாபத்தை ஏற்படுத்துவார். தொழிலில் இருந்த சங்கடங்களை விலக்குவார். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவார். மே1 முதல் குருபகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்ப்பதால் எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். சங்கடம் எல்லாம் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும்.
சனி சஞ்சாரம்
ஜன.1 - பிப்.15 வரையிலும், அஸ்தமனம், வக்கிர நிலைகளில் 2ம் இட சனிபகவானால் உண்டாகும் சங்கடமான பலன்களில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
ராகு - கேது சஞ்சாரம்
தைரிய, வீரிய ஸ்தானமான 3ம் இடத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். பொருளாதாரம் உயரும். எடுத்த செயல்களில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். விரோதியை வெற்றி கொள்ளும் நிலை உண்டாகும். கோயில் திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். வேலை, தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.
குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மனதில் வீண் ஆசைகள் உருவாகும். அதை நோக்கி நீங்கள் நடை போடுவீர்கள். தொழிலில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு சந்தோஷத்திற்குள் மூழ்குவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். மே1 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், பணியிடத்தில் இருந்த சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும். பட்டம், பதவி என ஆசைகள் பூர்த்தியாகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
சூரிய சஞ்சாரம்
மார்ச் 14 - ஏப் 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும், அக்.18 - டிச.15 வரையிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். திறமை வெளிப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரி விலகுவர். ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டிற்கு செல்ல அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
பொதுப்பலன்
ஜென்ம ராசியை விட்டு சனிபகவான் விலகி இருப்பதுடன், மற்ற கிரக சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால் பெருமளவில் நன்மை அடைவீர்கள். விருப்பம் நிறைவேறும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தொழில், பணி போன்றவற்றில் கவனமாக செயல்படுவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைகள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பீர்கள். அரசியல்வாதி, கலைஞர்களுக்கும் மிகப்பெரிய யோகம் ஏற்படும்.
தொழில்
தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். தொழிலை விரிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங், விவசாயத்துறையினர் முன்னேற்றம் அடைவர்.
பணியாளர்கள்
உழைப்பிற்கேற்ற மரியாதை இல்லை என்ற நிலை மாறும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி ஏற்படும். அரசு பணியாளர்கள் பழைய பிரச்னை, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.
பெண்கள்
தனித்திறன் வெளிப்படும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் முயற்சிகளில் கவனம் வேண்டும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முன்னேற்றத்திற்காக அதிகம் பாடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும். தடைபட்ட திருமணம் கைகூடும். சிலருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். உறவினரின் ஆதரவு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிரச்னை தீரும்.
கல்வி
விடாமுயற்சியுடன் படிப்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.
உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடம் மறையும். உணவு செரிமானம், அல்சர், வீசிங் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும் சனியின் பார்வை 8ம் இடத்தின் மீது பதிவதால் வாகனப் பயணம், இயந்திரப் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் அவசியம்.
குடும்பம்
முன்பிருந்த சங்கடங்கள் விலகும். விருப்பம் நிறைவேறும். வருமானத்திற்காக உங்கள் முயற்சி அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அவசிய செலவுகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள். புதிய இடம் வாங்குவது, வாகனம் வாங்குவது, பொன், பொருள் வாங்குவது என குடும்பத்தின் நலனுக்காக ஒவ்வொன்றாக வாங்குவீர்கள். பணத்தேவை அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தின் மீதான சனியின் பார்வை படுவதால் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும்.
பரிகாரம்
ஜென்ம நட்சத்திரத்தன்று காலபைரவர், நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம்; செயல்களில் நெருக்கடி
செவ்வாய் பகவான் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரமும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பமும் ராசிகளாகவும். சனி பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.
பிறக்கும் ஆண்டான 2024ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் இழுபறி, வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, உடல் நிலையில் சங்கடம் என சிரமங்கள் ஏற்பட்டாலும் 3ம் இட ராகுவால் இந்த நிலைகளில் மாற்றம் உண்டாகும். முயற்சி யாவும் வெற்றியாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல் நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூரில் வசிக்கும் நிலை, தேவையற்ற சங்கடம், நண்பர்களை விலகிச் செல்லும் நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை. வருமானத்தில் தடை, குடும்பத்திலும், பணத்திலும் நெருக்கடி, விபத்து, விரயம் என நெருக்கடிகள் உண்டாகும்.
சனி சஞ்சாரம்
மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும் நவ. 4 - ஜன. 31 வரையிலும் தாரா பலன்களாலும், அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் சங்கடங்களில் இருந்து உங்களுக்கு விடுதலை வழங்குவார் சனிபகவான். இக்காலத்தில் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொள்வீர்கள். குடும்பம், தொழில், பணிகளில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடை விலகும். உடல்நிலை சீராகும்.
ராகு - கேது சஞ்சாரம்
2024 ம் ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் சக்தியுண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் வீண் பிரச்னைகள் அதிகரிக்கும். தொழிலில் சங்கடம் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப்.30 வரை சுக ஸ்தானத்திலும், மே 1 முதல் பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான், மே1 முதல் உங்கள் வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியில் இருந்த பிரச்னைகளை விலக்கி வைப்பார். எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு பகவானால் நன்மை வழங்க இயலாது. ஆனால் அவர் பார்க்கும் இடங்களின் வழியே நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.
சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 14 - ஏப். 13, ஜூன் 15 - ஜூலை 16 வரையிலும், மற்றும் அக்.18 - டிச.15 வரையிலும், 3,4 ல் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16 வரையிலும் நவ.16 - டிச.31 வரையிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் வாழ்வில் இருந்த நெருக்கடிகளை நீக்கி வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகளை வழங்குவார். வழக்குகளில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடத்தை அகற்றி வைப்பார். எதிரிகளை விரட்டி வைப்பார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார் சமுதாயத்தில் தனி அந்தஸ்தை ஏற்படுத்துவார்.
பொதுப்பலன்
அவிட்டம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு - கேது, குருவின் சஞ்சாரம் இக்காலத்தில் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகளை அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியும், ராகு கேதுக்களின் சஞ்சாரமும் எதிர்மறை பலன்களையே ஏற்படுத்தும். இக்காலத்தில் செயல்களில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி புதிய செயல்களில் இறங்க வேண்டாம். வாகன இயக்கத்திலும், இயந்திரப் பணியிலும் எச்சரிக்கை அவசியம்.
தொழில்
அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலிலும் போட்டி அதிகரிக்கும்.
பணியாளர்கள்
முதல் 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான பலன் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலையில் சங்கடமான நிலை ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
பெண்கள்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில், தொழிலில், பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வேலைக்காக காத்திருந்தவர்களின் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும். பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செயல்களில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், உடல் நலனில் கவனம் செலுத்துவதும் மிக அவசியம். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடி தோன்றும் என்பதால் வேலைகளில் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.
கல்வி
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் அறிவுரைகளை ஏற்று தேர்வில் வெற்றி அடைவீர்கள். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சங்கடம் நெருக்கடி உண்டாகும் என்பதால் படிப்பில் கவனம் சிதறும்.
உடல்நிலை
1,2 ம் பாதத்தினருக்கு உடலில் இருந்த சங்கடம் மருத்துவத்தால் விலக ஆரம்பிக்கும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பரம்பரை நோய், தொற்று நோய் என்பதுடன் வாகன பயணத்தால் சங்கடம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படும்.
குடும்பம்
முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். பணவரவில் தடை உண்டாகும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனம் தேவை.
பரிகாரம்
நவக்கிரக வழிபாடு நன்மை தரும். சங்கடத்தில் இருந்து விடுவிக்கும்.